பக்கம்:இலக்கண வரலாறு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

297

உவமை

இலக்கியச் சுவை நயங்களை இலக்கணத்தில் சேர்ப்பது போல இவர் உவமைத் திறங்கள் உரையில் ஆங்காங்குப் பளிச்சிடுகின்றன;

தொகை வகை விரி என்னும் நூல்வகை ஒன்றோடு ஒன்று எழுந்து தொடர்பு பட்டு நிற்றலைப் பராரை (அடி) யினின்றும் சுவடு கொம்பு கோடு வளார் பலவாய் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டு நிற்றலுக்கு உவமை காட்டுகிறார் (பாயிரம்).

முதனூல் வழி நூல் சார்பு நூல்களைத் தந்தை, மகன், மருகன் என்பவரொடும் உவமைப்படுத்துகிறார் (8).

முதலெழுத்துகள் முன்னும் பின்னும் நிற்க இடையே எழுந்து ஒலிக்கும் ஆய்தத்தை இரு சிறகு எழும்ப எழும் உடலுக்கு (பறவைக்கு) உவமை காட்டுகிறார் (92). ஆய்தம் தனி எனப்படுதலை ‘அலி’ போலத் தனி நிற்றதுக்கு உவமைப்படுத்துகிறார் (60).

ஙகரம் அங்ஙனம், எங்ஙனம் எனச் சுட்டு எழுத்து வினா எழுத்துகளைக் கொண்டு வருதல், முடவன் கோலூன்றி வருதல் போல்வது என்கிறார் (106). இவ்வாறே பலப்பல உவமை நடைகளை மேற்கொள்கிறார்.

வழக்கியல்

‘கண் தழைப்பான் கதிரவற்றொழுதார்’ என்பதும் (345), ‘எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழை பெய்தது’ என்பதும் (384), வழக்கியலில் அறிவியலுண்மை அறித்துரைத்தவையாம்.

‘மைந்தன் பிறந்தான்; அதனால், தந்தை உவக்கும்’ (394) என்பது போன்றவை உலகியல் தேர்ச்சிச் சான்று.

பிழை செய்தவர் பிழையுணர்ந்து பகை மறந்து வந்தாராகவும், அவர்மேல் பகை கொண்டாரை நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/342&oldid=1474280" இலிருந்து மீள்விக்கப்பட்டது