பக்கம்:இலக்கண வரலாறு.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

“இணரெரி தோய்வன்ன இன்னா செயினும், புணரின் வெகுளாமை நன்று” என்னும் திருக்குறளை அறியீரோ? அதற்குச் சங்கர நமச்சிவாயர் எழுதிய அருமையான உரையை நோக்குங்கள் என்று திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் எடுத்துரைத்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டுகிறார் உ. வே. சா; அக்குறளின் விளக்கவுரை காண்க:

“பிற உயிர்க்கு இன்னா செயின் அவை பிழையாது தமக்கு வருதல் கருதித் தம்மாட்டு அன்பும் பிற உயிர்கண் மாட்டு அருளும் இன்னா செய்தலான் மேன்மேல் வளரும் பிறப்பிறப்பின் அச்சமும் நம்மால் இன்னா செய்யப்பட்டாரை நாமடைந்து இரத்தல் கூடினும் கூடும்; அதனால் யார் மாட்டும் இன்னா செய்யக்கடவேம் அல்லம் என்னும் வருங்கால உணர்ச்சியும் இலராய் ஒருவர், தன்னால் ஆற்றல் கூடாத இன்னாதனவற்றைத் தன்கட் செய்தாராயினும் அவர் தமக்கு வேண்டுவதொரு குறை முடித்தல் கருதி நாணாது தன்னை அடைந்தாராயின் அவர் செய்த இன்னாமை கருதி அவரை வெகுளாது அவற்றை மறந்து அவர்வேண்டும் குறைமுடித்து முன் செய்த இன்னாமையால் அவர் கூசி ஒழுகுதல் தவிர்தற்குக் காரணமாகிய மெய்ப்பாடு முதலியன தன்கட் குறிப்பின்றி நிகழ அவர்க்கு இனியனாகி இருத்தல் தன் சால்புக்கு நன்று” (360).


அறுபத்து மூவர் என்பதற்கு அறுபதின்மரும் மூவரும் என்று பகுத்து அறுபது நாயன்மார்களும் மூவர் முதலிகளும் எனப் பொருள் கொள்ளும் வகையில் காட்டுவது இவர்தம் நுண்மாண் நுழைநோக்கை வெளிப்படுத்தும் (358).

பதிப்பு

நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1851 இல் ஆறுமுக நாவலரால் முதற்கண் பதிப்பிக்கப்பட்டது. பின்னர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/343&oldid=1474281" இலிருந்து மீள்விக்கப்பட்டது