பக்கம்:இலக்கண வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

299


1887 இல் இரண்டாம் பதிப்பும் அவரால் கொண்டு வரப்பட்டது. உ. வே. சாமிநாதையர், சங்கர நமச்சிவாயர் உரைப்பதிப்பை 1925, 1935 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வந்தார்.


ஈ. சிவஞான முனிவர் புத்தம் புத்துரை

சங்கர நமச்சிவாயர் உரையில் வேண்டுவன விரித்தும், திருத்தியும் அப்புத்துரையின் மேல் புத்துரை செய்தமையால், சிவஞான முனிவர் உரை புத்தம் புத்துரை எனப்படுவதாயிற்று.

முனிவர் வரலாற்றைத் தொல்காப்பிய உரைப்பகுதியில் கண்டு கொள்க.

சார்பெழுத்து

தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்றெனக் கூறினாராக நன்னூலார் பத்தெனக் கூறுதலின் காரணத்தை விளக்குகிறார்.


“தொல்காப்பியர் செய்கை ஒன்றனையும் நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தாராகலின், இல்வாசிரியர் செய்கையும் செய்யுளியலும் நோக்கிச் சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தார் என்பதும் உய்த்துணர்க” என்கிறார் (60).

முறைவைப்பு

அகர முதலாக நெடுங்கணக்கு வைப்பு முறையை மிக விரிவாக விளக்கியுள்ளார்; அவற்றுள் ஒன்று (73).

“வலியாரை முன்வைத்து மெலியாரைப் பின் வைத்தல் மரபாகலின் அச்சிறப்பு நோக்கி வல்லெழுத்துக்கள் முன்னும் அவ்வவற்றிற்கு இனமொத்த மெல்லெழுத்துக்கள் அவ்வவற்றின் பின்னுமாக வைக்கப்பட்டன. அவ்விரண்டும் நோக்கியல்லது இடை நிகரனவாய் ஒலித்தல் அறியப்படாமையின் அதுபற்றி இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/344&oldid=1474282" இலிருந்து மீள்விக்கப்பட்டது