பக்கம்:இலக்கண வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

யெழுத்துக்கள் அவ்விரு கூற்றிற்கும் பின்வைக்கப்பட்டன” என்பது மெய்யெழுத்துகளின் வைப்பு முறை பற்றியது.

சேர்க்கை

‘வேறு இல்லை உண்டு’ என்பவை ஐம்பால் மூவிடங்சுட்கும் பொதுவாக வருதலை நன்னூலார் கூறுவார். சிவஞான முனிவர் ‘மொழிந்த பொருளோடொன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல்’ என்பதனால் ‘வேண்டும் தரும் படும்’ என்னும் சொற்களையும் அமைத்துக் கொள்கிறார் (339).

“மாணாக்கனுக்குக் கசையடி கொடுத்தான் ஆசிரியன்”
“கள்ளனுக்குக் கசையடி கொடுத்தான் அரசன்”

என்று இவர் காட்டும் எடுத்துக்காட்டுகள் கல்லாரைக் கள்வரெனக் கருதித் தண்டித்த காலநிலைச் சான்று போலும் (298).

மறுப்பு

உரையாசிரியர் பலரையும் சுட்டி இவர் மறுத்தல் வழக்கினர் என்பதைப் பல இடங்களில் அறியலாம். ஓர் எடுத்துக்காட்டு: நூற்பா 339. தமிழ் நூற்பயிற்சி ஒன்றுமே யுடையாரை உரையாசிரியர் என இவர் மதியாது தள்ளுதல் பொதுச் செய்தி. இதனை விளக்கும் ஒரு சான்று, “அம்முன் இகரம் யகரம்” என்னும் நூற்பா விளக்கம் (125). ‘ஆங்கிலம் அறியார் தமிழறியார்’ என இக்காலம் எண்ணுவார் போல்வது ஈதாம்.

ஒரு நூற்பா

“நடவா மடிசீ” என்னும் நூற்பா விளக்கத்தில் (137), “கையறியா மாக்கட்கன்றி நூலியற்றும் அறிவினையுடைய மக்கட்குப் பல்கலைக்குரிசில் பவணந்தி என்னும் புலவர் பெருமான் புகழ்போல விளங்கி நிற்றலான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/345&oldid=1474283" இலிருந்து மீள்விக்கப்பட்டது