பக்கம்:இலக்கண வரலாறு.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302



நன்னூலுக்கு உரை வரைந்ததையன்றிச் சித்தி விநாயகர் இரட்டை மணிமாலை முதலிய நூல்களும் இயற்றினார் என்பது அறிய வருகின்றது.

வடமொழி தென்மொழிப் புலமை மிக்கவர் என்றும், சீரிய பாவலரும் மெய்ப்பொருள் வல்லாரும் ஆவர் என்றும் இவரைச் சைமன் காசிச் செட்டி என்பார் கூறுவர்.

காலம்

இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள “சிவியா தெருவில் வாழ்ந்து காலமானார்” என்பர். இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாம்.

ஊ. இராமாநுசக்கவிராயர் உரை

இவர் முகவை இராமாநுசக் கவிராயர் எனப்படுவார். முகவை என்பது இராமநாதபுரம். இயற்றமிழாசிரியர் இராமாநுசக் கவிராயர் என்பது இவர் சிறப்புகளுள் ஒன்று.

கல்வி

இவர் இளமையிற் படைத்துறையில் பணிசெய்தவர். பின்னர்ச் சிவஞான முனிவரின் மாணவராகியவரும் இராமநாதபுர அரசரின் அவைக்களப் புலவராக இருந்தவருமாகிய சோமசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றார். தம் ஆசிரியரையும் தம் மாணவ நிலையையும்,

"சோமசுந் தரனெனும் தொன்னூற் குரவன்
காமர்செஞ் சேவடி கண்ணினை யாக் கொண்(டு)
இயல்பல உணர்ந்தோர் எண்ணிலர்; அவருழைத்
துயல்வரு கீழ்மையில் தொடர்கீழ் நிலையினேன்"

என்கிறார் (தேசிகர் சேவடி மனக்கு; மாசறு மணிமுடி எனக்கு என்னும் நன்னூல் உரைச் சிறப்புப் பாயிரப்பகுதி).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/347&oldid=1474285" இலிருந்து மீள்விக்கப்பட்டது