பக்கம்:இலக்கண வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304


பஞ்சரத்தினமாலை, குடாரம் என்பனவும் இவரியற்றிய நூல்களாகும். 1852இல் இயற்கை எய்தினார். இவர்தம் விரிந்த வரலாற்றை நன்னூல் விருத்தியுரை முகப்பில் காண்க.

உரைப்பாயிரம்

இவர் இயற்றிய நன்னூல் உரைக்கு, வெ. தொல்காப்பியம் வரதராச முதலியார், அட்டாவதானம் வீராசாமிக் கவிராயர், களத்தூர் வேதகிரிப் புலவர், சேமங்கலம் நாராயண வுபாத்தியாயர், சென்னை கேசவ வுபாத்தியாயர் ஆகியோர் உரைச் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளனர். இவருரை ஐங்காண்டிகை யுரை என வழங்கப்பட்டமை அறிய வருகின்றது.

உரை

“அ இ உம்முதல் தனிவரிற் சுட்டே”

என்பதில் (66) இவர், “அகரம் தூரப்பொருளையும், இகரம் சமீபப் பொருளையும், உகரம் எதிர்முகமின்றிப் பின்னிற்கும் பொருளையும் சுட்டுமெனக் காண்க. உகரம் அவ்வாறு சுட்டி நிற்பதை, ‘ஊழையும் உப்பக்கங் காண்பர்’ என்பதற்கு, பின்பக்கமாய் முதுகு காட்டக் காண்பர் எனப் பொருள் கூறுதலாற் காண்பர்” என விளக்கம் எழுதுதல் இவர்தம் பகுப்பாற்றல் நுணுக்கம் காட்டும்.

திருத்தம்

“எயாமுதலும்” எனப் பிறர் பாடங்கொள்ள இவர் “எய்யா முதலும்” எனப்பாடங்கொள்வார் (67).

“தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்
டெய்தும் எகர ஒகரமெய் புள்ளி”

என்னும் நூற்பாவை, (98)

“தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்
டெய்தும்ஏ காரம்ஒ காரமெய் புள்ளி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/349&oldid=1474287" இலிருந்து மீள்விக்கப்பட்டது