பக்கம்:இலக்கண வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

305


எனத் திருத்திக் கொண்டுளார். இத்திருத்தத்திற்குச் காரணமும் கூறுகின்றார்; “எகரம் ஒகரம் மெய் புள்ளி’ பெறும் என்ற இச்சூத்திரத்தை ‘ஏகாரம் ஓகார மெய் புள்ளி’ பெறும் எனத் திருப்ப வேண்டிற்று. என்னெனின், இக்காலத்தார் ஏகார ஓகாரங்களுக்கே புள்ளியிட்டெழுதுவது பெருவழக்காயினமையால் என்க” என்கிறார்.

பாடம்

மாத்திரை குறைதற்குறியாக அமைந்ததே புள்ளி எழுத்து. அம்முறைப்படி குறில் எ, ஒ என்பவற்றுக்குப் புள்ளியிடல் (எழுத்தின் மேலே மெய்யெழுத்திற்குப் புள்ளி வைத்தல் போல் வைத்தல்) வழக்கு. அக்காலத்தில் புள்ளியில்லாத ஏ, ஒ என்பவை இக்காலத்தில் ஏ, ஓ என்பன போல நெடிலாகக் கருதப்பட்டன. இவ்வாறு நெடில் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டமையால் குறிலுக்குப் புள்ளியிட்டெழுதுதல் வேண்டாமையாயிற்று. இவற்றைக் கொண்டு, “இறந்தது விலக்கல் எதிரது போற்றல்” என்னும் முறையான் இவ்வாறு பாடம் திருத்திக் கொண்டதாகக் கூறுகின்றார். பிற்கால மாற்றங்கள் வளர்ச்சிகள் ஆகியவற்றை உரையில் குறித்தலே உரை வழக்கு. மூலபாடத்தில் மாற்றங்களை ஏற்றும் முறைமை ஏற்றுக் கொள்ளப்பட்டால் மூலபாடம் என ஒன்று இல்லாமலே ஒழியும். ஆதலால் எத்தகு சிறந்த பாடம் எனினும் மூலத்தில் கைவைத்தல் கூடாது என்பதே நூற் காப்பாகும்.

மறுப்பு

“அம்முன் இகரம் யகரம்... ஐயொத் திசைக்கும்” என்னும் நூற்பா உரையில் (125), '

“கைவேல் களிற்றொடு போக்கி”

என்னும் குறளை, “கய்வேல் களிற்றொடு போக்கி” எனக் காட்டுகின்றார். அந்நூற்பாவிலேயே,

இ. வ-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/350&oldid=1474288" இலிருந்து மீள்விக்கப்பட்டது