பக்கம்:இலக்கண வரலாறு.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308


நிலை இறுதி வகுப்புக்கும் இவ்வடையாளமிட்டவை (F;M) பயில வேண்டும் என்றும் குறிப்புகள் உள்ளன.

பாயிர நூற்பாவாகிய “மலர்தலை உலகின்” என்பதன் முடிவில், “இது நூல் செய்தவன் பெயர் முதலாகிய பதினொன்றையும் சொல்கின்றது” என்று குறிப்பிட்டுச் சொற்பொருள் சொல்லி வேண்டும் சுருங்கிய வினக்கம் தருகின்றது. இம் முறையே நூன் முறையாக அமைகின்றது. மாணவர்க்கென எளிமைப்படுத்தித் தருதலை நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்ட உரை என்பது வெளிப்படை.

பதிப்பு

இவ்வுரை 1875இல் ஆசிரியரால் தனியே வெளிப்பட்ட தெனினும், இவ்வாசிரியர் மாணவர் சந்திரசேகர கவிராச பண்டிதரால் 1854இல் சங்கர நமச்சிவாயர் விருத்தியுரையும், இவர் காண்டிகையுரையும் இணைத்துப் பதிப்பிக்கப் பட்டதென்பது அறிய வருகின்றது. பின்னர் 1889இல் விசாகப் பெருமாளையர் காண்டிகை, சங்கர நமச்சிவாயர் உரை, சிவஞானமுனிவர் உரை ஆகிய எல்லாமும் திருமயிலை தெய்வசிகாமணி முதலியார், திருமயிலை சண்முகம் பிள்ளை ஆகியவர்கள் குறிப்புரையுடன் வெளிவந்தது. இப்பதிப்பும் மாணவரை நோக்கியதே என்பது புலப்படுகின்றது:

“சான்றோர் செய்த நூலைச் செய்தபடியே பதிப்பிப்போர் அதனைப் பொன்னேபோற் பொதிந்து அதில் ஓரக்கரமேனும் மாறுபடாது அச்சிடுதல் கடனாகும் என்பது முறையாயினும், இவ்வாறு பிளவுபடுக்கவும், சேர்க்கவும் புக்கது சர்வகலாசாலைகளிலும் வித்தியாசாலைகளிலும் கல்வி கற்கும் மாணாக்கர்கள் தத்தம் சென்னை யூனிவெர்ஸிடி பரீட்சைகளுக்கு வேண்டுவனவற்றை இவையிற்றைக் கொண்டே கற்று அவைகளிற்றேர வேண்டுமென்னும் அவாவின் காரணத்தானும் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/353&oldid=1474291" இலிருந்து மீள்விக்கப்பட்டது