பக்கம்:இலக்கண வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


வரலாறு

யாழ்ப்பாணத்து நல்லூரினராகிய இவர் தந்தையார் கந்தப்பிள்ளை. இருபாலைச் சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத்துப் புலவர் ஆகியோரிடம் இலக்கிய இலக்கணம் கற்றவர். ஒன்பதாம் அகவையிலேயே நூல் எழுதுவதற்கு ஏடும் எழுத்தாணியும் பிடித்தவர் என்பர்.

தமிழ் உரைநடை எழுதுதலில் தேர்ச்சியர். பீற்றர் பெர்சிவல்ஐயர் விருப்பப்படி தமிழில் கிறித்தவ மறையை மொழிபெயர்த்துத் தந்தவர். சொற்பொழிவு வன்மை கண்டு திருவாவடுதுறைத் திருமடத்தினரால் ‘நாவலர்’ எனச் சிறப்புச் செய்யப்பட்டவர்.

உரை

இவர் இயற்றிய நூல்கள், பதிப்பித்த நூல்கள் மிகப் பல. இவர் கண்ட நன்னூல் காண்டிகை எளிமையும் தெளிவும் மிக்கது. தொடக்கக் கல்வியாளரும் ஐயமற இலக்கண நுட்பங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்பட்டது. மாணவர்களுக்குப் பாலபாட வரிசை எழுதிய இவர், இலக்கணத் தெளிவு கருதி எழுதியமையால் வினா விடை முறையிலும் நன்னூல் உரை வரைந்தார். இலக்கண வினாவிடை, இலக்கணச் சுருக்கம் என்பவை அவை.

பயிற்சி

இலக்கணப் பகுதியைக் கற்றவர் தம்மைத்தாமே ஆய்ந்து கொள்வதற்கு வாய்ப்பாக ‘அப்பியாசங்கள்’ (பயிற்சிகள்) என்பதைப் பகுதிதோறும் வெளியிட்டுள்ளார். சொல்லைப் பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் என்னும் உறுப்பிலக்கண முறையில் பிரித்துக் காட்டவும் விதிகளைக் கூறவும் இவர் நூலில் அமைந்துள்ள ‘பகுபத முடிபு’ என்னும் பகுதி சிறந்த வழி காட்டியாக விளங்குகின்றது. 1880இல் நன்னூல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/355&oldid=1474293" இலிருந்து மீள்விக்கப்பட்டது