பக்கம்:இலக்கண வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311

காண்டிகையுரை வெளிவந்தது. பின்னர்த் தொடர்ந்து இந்நாள் வரை அதன் பதிப்புகள் வந்து கொண்டுள்ளன.

பதிப்பு

இவர் சங்கர நமச்சிவாயர் உரையை வெளியிட்டதை அறிந்தோம். பிரயோக விவேகம், தொல்காப்பியம் — சேனாவரையருரை, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, தருக்க சங்கிரகம், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்கச் சூறாவளி முதலியவற்றையும் பதிப்பித்துள்ளார்.

தொண்டு

யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் இவர் அச்சகம் அமைத்ததும், யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையிலும் சிதம்பரத்திலும் பாடசாலைகள் ஏற்படுத்தியதும், தம் நூல்கள் வழிவழியாக வெளி வருவதற்குரிய அடிப்படைத் திட்டங்களை வகுத்தமைத்ததும் குறிப்பிடத்தக்க செய்திகளாம்.

உரைநடை

நாவலர் உரைநடைக்குச் சான்றுகள் சில: (1) “இலக்கணங் கற்றவர் இலக்கியத்தில் அவ்விலக்கணம் அமைத்து கிடக்கு முறைமையை ஆராய்ந்து விதியோடு கூறப் பயிலல் வேண்டும். அது செய்யப் பயிலாவிடத்து, இலக்கண நூற்கல்வியால் ஒரு பயனும் இல்லை”.

- நன்னூல்; இலக்கண அமைதி.

(2) உபாத்தியாயருக்கு அறிவித்தல்: “உபாத்தியாயர் நாடோறும் தாம் மாணாக்கர்களுக்குச் சொல்லும் பாடத்தை, முன்னரே வீட்டிலே அவதானத்தோடு வாசித்துச் செவ்வையாக ஆராய்ந்து, உள்ளத்தில் அமைத்துக் கொள்ளல் வேண்டும்”.

(3) மாணாக்கர்க்கு அறிவித்தல்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/356&oldid=1474294" இலிருந்து மீள்விக்கப்பட்டது