பக்கம்:இலக்கண வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. அகப்பொருள் விளக்கம்


நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்ட அகப்பொருள் இலக்கண நூல் இது. இதனை நம்பி அகப்பொருள் என்றும் கூறுவர். தொல்காப்பியம் அகப்பொருளைக் கூற்றுவகையால் கூறும். இந்நூல் துறைவகையால் கூறுகின்றது. இத்துறையமைதிக்குத் திருக்கோவையார் உதவியிருக்கக்கூடும். ஆயினும் திருக்கோவையார் தரும் துறைகளையெல்லாம் கூறினாரல்லர். வேண்டுவ கொண்டார் எனலாம். ஆனால், இவர் இலக்கணம் கோவை இலக்கியங்கள் சிலவற்றுக்கு முழுமையான அமைப்புநூலாக விளங்குவதாயிற்று. அவற்றுள் தலையாய ஒன்று பொய்யா மொழிப் புலவர் இயற்றிய தஞ்சை வாணன் கோவை.

நம்பி

நாற்கவிராச நம்பி என்பதில் நம்பி இயற்பெயர் என்பர். முன்னாளில் எட்டி காவிதி என்பவை போல நம்பி என்பது அரசு வழங்கிய சிறப்புப்பட்டப் பெயராகவும் விளங்கியுள்ளது. அறிவுடை நம்பி, நம்பி நெடுஞ்செழியன் முதலிய பெயர்களில் இயற்பெயராக இருத்தல் போல் இப்பெயர் இருக்கவும் கூடும். நால்வகைப் பாக்களிலும் தேர்ச்சியராக இருந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பதைப் பெயர் கொண்டு அறியலாம். இவர் நாற்கவிப் புலமையர் என்பதைக் காட்டுவதற்குத் தக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/360&oldid=1474298" இலிருந்து மீள்விக்கப்பட்டது