பக்கம்:இலக்கண வரலாறு.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

319

என அகத்திணை இயலில் கூறுகிறார். ‘தம்பதி நீங்கி’ என்பதும் ‘துறவறம்’ என்பதும் தொல்காப்பியர் கூறாப் புதுநெறி.

“தெய்வம் உணாவே” எனக் கருப்பொருளைப் பட்டியலிட்டு அமைகிறார் தொல்காப்பியர். களவியல் உரையால் நிறைவு செய்கிறது. வீரசோழியம் உரையில் குறிஞ்சி நடை முதலாக விரித்துச் செய்கிறது. நம்பியகவலோ குறிஞ்சிக் கருப்பொருள் முதலியவற்றை விரிவான நூற்பாகவே வடிக்கின்றது. துறைகளை நாடகப் புனைவு வகையிலும் கொண்டு செல்கின்றது.

இதற்குப் பழமையானதோர் உரையுண்டு. அவ்வுரை நூலாசிரியர் செய்ததே என்பதைச் சிறப்புப் பாயிரத்து வரும்,

“தொகுத்து முறைநிறீஇச் சூத்திரம் வகுத்தாங்
ககப்பொருள் விளக்கமென் றதற்கொரு நாமம்
புலப்படுத் திருளறப் பொருள்விரித் தெழுதினன்...
நாற்கவி ராச நம்பியென் பவனே”

என்பது கொண்டு கூறுவர். தஞ்சைவாணன் கோவை செய்த பொய்யாமொழியார் காலம் பிற்பட்டது. அந்நூலில் இருந்து துறைதோறும் காட்டப்படும் எடுத்துக் காட்டுகளை நோக்கப் பின்னூலில் இருந்து முன்னூலார் எடுத்துக்காட்டியிருக்க இயலாமையால் அவருரையன்று என்பர். இனித் தஞ்சைவாணன் கோவை நூலாசிரியர் உரை செய்த காலத்துச் சேர்க்கப்படவில்லை. பின்னவர் ஒருவர் முன்னர் இருந்த உரையுடன் இயைத்துக் கொண்டார் என்பர். அதனைக் கருதினால் நூலாசிரியரே உரையாசிரியருமாவர் என்னும் பாயிரச் செய்தி மெய்மையாம் என்பர். அதற்கு, “சான்றோர் செய்யுள் இல்லை ஆகலின் அஃதிலக்கணமன்று” என்றும் (139), “சான்றோர் செய்யுள் இல்லாதவற்றிற்குச் சூத்திரந் தன்னையே இலக்கியமாகக் கொள்க” என்றும் (146}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/364&oldid=1474302" இலிருந்து மீள்விக்கப்பட்டது