பக்கம்:இலக்கண வரலாறு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

உரையில் சொல்லியிருந்தும் தஞ்சைவாணன் கோவை, தொல். கள. உரை மேற்கோள் ஆகியவற்றைக் காட்டியிருத்தலால் பின்னர்ச் சேர்த்தது என்பர்.

உரையாசிரியர் ‘சான்றோர் செய்யுள்’ இல்லை என்றது சங்கப் புலவர் பாடல் இல்லை என்பதேயாம். சங்கச் சான்றோர், சான்றோர்; பிற்காலச் சான்றோர் என்று வழக்குண்மை உரையாசிரியர் பொது நெறியாம். ஆதலால் இக்குறிப்புகளைக் கொண்டு பிற்சேர்ப்பு எனல் இயலாது.

நூலாசிரியரே உரையும் எடுத்துக்காட்டும் காட்டிய சுவடிகளும், அச்சுவடிகளின் வேறாகப் பழைய உரையுடன் தஞ்சைவாணன் கோவை மட்டுமே எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட சுவடிகளுமாக இரு வேறு சுவடிகள் இருந்தமை அறியப்படுவதாலும், இரண்டையும் இணைத்துப் பதிப்பாளர்கள் பதிப்பித்து விட்டமையாலும் இச்சிக்கல் நேர்ந்தது எனலாம்.

உரையாசிரியர் மரபு

உரையாசிரியர் இளம்பூரணர் எழுத்ததிகார முகப்பில், “எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோ எனின்” , “உணர்த்தினார்”, “இதனுள் உணர்த்தினார்” என்றும் “வேண்டினார்” (2) “குறியிடார்” (3) என நூலாசிரியரைத் தொடர்ந்து குறிப்பிட்டுச் செல்கிறார். இவ்வாறே பிறரும் செல்லுதல் மரபாதல் அறிக. இவ்வுரையாசிரியர், “மேற் பாயிரத்திலக்கணம் உணர்த்திப் போந்தாம்; இனி நூலிலக்கணம் உரைக் கின்றாம்” (1) என்கிறார். பிறர் நூற்பாக்களைச் சுட்டி “என்றாராகலின்” என்கிறார், அகப்பொருள் நூற்பாக்களைக் கூறி விளக்கும்போது “எண்ணப்பட்டது” (6), “கூறப்பட்டது” (13) “கொள்ளப்பட்டன” (137, 149) என்பவற்றைப் போலவே நெடுகிலும் கூறுகிறார். எண்ணினார், கூறினார், கொண்டார் என்றிலர் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/365&oldid=1474303" இலிருந்து மீள்விக்கப்பட்டது