பக்கம்:இலக்கண வரலாறு.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325

வழியாக என்னால் களவியல் காரிகையின் பதிப்பு 1973இல் கொண்டுவரப்பட்டது.

“எத்துணை அரிய நூல்களை நாம் இழந்து விட்டோம் என்பதைக் கணக்கிடவும் முடியவில்லை” என்னும் ஏக்கத்தை இதன் முதற்பதிப்பாசிரியர் வெளியிடுவார். யாப்பருங்கல விருத்தி, புறத்திரட்டு, களவியல் காரிகை என்னும் மூன்று நூல்களும் அவ்வேக்கத்தை உண்டாக்குபவை என்பதை ஆர்வத்தால் கற்பார் அனைவரும் அறிவர்.

சில நூற்பெயர்

அகத்திணை, அரையர் கோவை, இன்னிசைமாலை, ஐந்திணை, கண்டனலங்காரம், காக்கைச் செய்யுள், கிளவித் தெளிவு, கிளவிமாலை, கிளவி விளக்கம், கோயிலந்தாதி, சிற்றெட்டகம், திணைமொழி, வல்சந்த மாலை, மழவை எழுபது, வங்கர் கோவை என்று இந்நூல் காட்டுபவை இன்று நாம் காண வாய்க்காத அரிய நூல்களாயின.

நூல் அளவு

இரண்டாம் பதிப்பில் முதற்பகுதிக்கு அகப்பொருள் என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழ்நெறி விளக்கப் பொருளியல் அத்தலைப்பைக் கொள்ளுதற்கு அடிப்படையாக இருந்தது. இரண்டாம் பகுதி களவொழுக்கம்; மூன்றாம் பகுதி கற்பொழுக்கம், கற்பொழுக்கம் உடனிலைச் செலவுக்கு மேல் நூற்பா இல்லாமையால் அதன் பின்னிலை அறியக் கூடவில்லை.

இந்நூலில் கிடைத்துள்ள காரிகை 21. நூற்பா 1; மேற்கோள் பாடல்கள் 416. இவையே நூல் வழியில் கிடைத்து முதற்பதிப்பில் இடம் பெற்றவை. இக் காரிகைகள் அந்தாதி யாப்பில் அமைந்தவை.

உரைமுறை

இதனுரை காட்சிப் பகுதியில் இறையனாரகப் பொருள் காட்சியை அப்படியே வாங்கிக் கொண்டு நடக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/370&oldid=1474307" இலிருந்து மீள்விக்கப்பட்டது