பக்கம்:இலக்கண வரலாறு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334


நூல் நிலையப் பதிப்பாசிரியர்கள் கூறுகின்றனர். பொருத்தவியல் முதன் மொழியியல் என வழங்கப்பட்டமையும் அறிய வருகின்றது (ச. வையாபுரிப் பிள்ளை பதிப்பு).

பொருள்

பொருத்தவியல்:மங்கலம், சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம் நாள், கதி, கணம் என்னும் பத்துப் பொருத்தங்களையும் பற்றிக் கூறுகிறது.

செய்யுள் மொழியியல்: பிள்ளைத்தமிழ் முதல் இசைச் செய்யுள் ஈறாக 48 வகை நூல்களைப் பற்றிக் கூறுகிறது.

பொது மொழியியல்: பாயிரவகை, வருணவகை, பாக்களின் சாதி, உறுப்பழிந்த செய்யுள், உவமை, கவிவகை, அவைவகை, ஓலையிலக்கணம், வாதிடல் முறை, செய்யுள் செய்யத்தக்கவர், தகாதவர், கேட்பிக்கும் நெறி, பரிசில் நல்கார்க்கு வருவது ஆகியன பற்றிக் கூறுகிறது. இவர், நல்லவை நிறையவை தீயவை குறையவை என அவையை நான்காகப் பகுத்தோதுகிறார்.

உரை

நவநீதப் பாட்டியலுக்கு இரண்டுரைகள் கிடைத்துள்ளன. உரையியற்றியவர் பெயர் தெரியாமையால் உரை 1, உரை 2 என்றே குறிக்கும் நிலை உண்டாயிற்று.

“ஓர் உரை மிகவும் பழமையானது என்பது அதில் எடுத்தாளப்படும் நூல்களால் விளங்கும். அவற்றில் பெரும்பாலனவற்றைக் காலத்தால் முற்பட்ட வெண்பாப் பாட்டியலின் உரைகாரர் கூட எடுத்தாளவில்லை. இரண்டாவது உரை அத்துணைச் சிறப்பினதன்று” என்று பதிப்பாசிரியர்கள் முகவுரையில் கூறியுள்ளனர்.

பழையவுரை

பழமையான உரையால் அறியப்படும் நூல்கள்: அகத்தியனார் ஆனந்த ஓத்து, அணியியல், அவிநயனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/379&oldid=1474325" இலிருந்து மீள்விக்கப்பட்டது