பக்கம்:இலக்கண வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxvii

பிரிவாக விளங்கிற்று. அவ்வகையில் களவியல், அகப்பொருள் விளக்கம், களவியல் காரிகை, மாறன் அகப்பொருள் இன்னவை சுட்டத்தக்கன.

புறப்பொருள் பற்றியும் தனி நூல்கள் உண்டாயின. அவை விரிவுடையன அல்ல எனினும், பன்னிரு படலம் என்பதும், புறப்பொருள் வெண்பாமாலை என்பதும் குறிப்பிடத்தக்கன. புறநானூறும் பதிற்றுப்பத்தும் புற இலக்கியமாக விளங்கின. பாட்டு தொகைப் பரப்பில் இவ்விரண்டே புறப்பொருளாதல் போல, பிற்கால இலக்கணப் பரப்பில் சுட்டிய இரண்டே புறப்பொருள் இலக்கணமாக அமைந்தன. அதன் காரணம் நூலின் அகத்தே ஆயப்படுதலைக் கண்டு கொள்க.

இனி, பாட்டியல் என்பது பழையது ஒருபாலும், புதுவது ஒருபாலும் ஆகிய ஒரு வகைப்பட்ட நூல் ஆயிற்று. பழையது என்றது பள்ளு, குறவஞ்சி, பாடாண், செவியறிவுறூஉ என்பன போன்ற நூல்வகை விரிவு, தொல்காப்பியக் குறிப்பு, திணை, துறை முதலியவற்றைத் தனித்தனி வாங்கிக் கொண்டு விரித்தவை. அப்பகுதி இலக்கியவகைப் பெருக்கத்திற்கு உதவின. ஆனால், பொருத்தங்கள் என்று கண்டு, எழுத்துகளுக்கும் வருணச் சாயம் பூசி, அமுதும் நஞ்சும் ஏற்றி, நாளும் கோளும் ஊற்றி, ஆக்கமாவதுபோல் அழிவுக்கு வகை செய்த நூல் வகை அது.

பன்னிரு பாட்டியல், வெண்பாப்பாட்டியல் முதலாகப் பாட்டியல் நூல்கள் பல்கின. யாப்பருங்கலத்திற்கு முன்னே யாப்பு நூல் எத்துணைப் பெருக்கம் கொண்டதோ அதனிலும் விஞ்சிய பெருக்கத்தைப் பாட்டியல் நூல்கள் பின்னே கொண்டன. அதனினும் கேடு, அப்பிற்கால நூற்பொருள் கொண்டு, முற்கால நூல்களையும் பார்த்து மதிப்பிடும் ஒரு பார்வை!

பாட்டியல் தனியே வரினும், ஐந்திற்கு மேல் ஆறாம் இலக்கணம் எனப் பெயர் பெற்றிலது. அதனைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/38&oldid=1471340" இலிருந்து மீள்விக்கப்பட்டது