பக்கம்:இலக்கண வரலாறு.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335

கலாவியல், இந்திரகாளியம், கல்லாடம், கல்லாடனார் கலாவியல், கல்லாடனார் வெண்பா, செய்யுள் வகைமை, திருப்பிரவாசிரியர் தூக்கியல், தொல்காப்பியனார் செய்த பாட்டியல், தொல்லாசிரியர் செய்தது, பருணர் பாட்டியல், பிங்கல சரிகை, பொய்கையார் கலாவியல், பொய்கையார் பாட்டியல், மாமூலம், முந்திரியார் வஞ்சினம், முள்ளியார் கவித்தொகை, வாமன சரிதை என்பவை.

நால் வருணத்தவர்க்கும் விடுக்கும் ஓலைக்கும் கூட அளவு வேறுபாடு; இருக்கும் பலகையிலும் வேறுபாடு என்பவற்றை எண்ணிப் பார்க்க வருணத்தின் வல்லாட்சி விளங்குகிறது.

“ஓலைய திலக்கணம் உரைக்கும் காலை நாலாறு விரலாம் நான்மறை யோர்க்கே பாருடை யோர்க்குப் பதிற்றி ரண்டாகும் வணிகர்க் கீரென் விரலா கும்மே சாணென மொழிய சூத்திரர்க் களவே”

இது பொய்கையார் கலாவியல் என்று கூறப்படுகிறது (92).

பதிப்பு

பாட்டியற் கொத்து என்னும் நூலில் முதல் 18 கலித்துறைகள் ‘நவநீதப் பாட்டியல்’ என்னும் பெயருடன் 1908 இல் வெளிவந்தது. ச.வையாபுரிப்பிள்ளை பதிப்பொன்று முழு நூலாக வந்துளது. 1944 இல் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய வெளியீடு எண் 2. என்பதாக வெளிவந்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/380&oldid=1474328" இலிருந்து மீள்விக்கப்பட்டது