பக்கம்:இலக்கண வரலாறு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

24. மாறனலங்காரம்


பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய அணிநூல் மாறன் அலங்காரம்.

மாறன்

மாறன் என்பது பாண்டியன் பெயர்களுள் ஒன்று. இங்குப் பாண்டி நாட்டு ஆழ்வார்களுள் புகழ் வாய்ந்த நம்மாழ்வாரைக் குறிப்பதாயிற்று. இவர் பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டதும், பொருநைக்கரை சார்ந்ததும் ஆகிய திருவழுதி வளநாட்டுச் சிற்றரசர் வழியினர். வேந்தர் பெயரையோ குடிப் பெயரையோ சிற்றரசர் படைத்தலைவர் ஆகியோர் தம் பெயராகச் சூடிக் கொள்ளும் பண்டையோர் மரபுப்படி மாறன் என்னும் பெயரை இவர் முன்னோர் கொண்டனராக இவரும் கொண்டார் என்க. இவர்க்கு மாறன் என்பதை அன்றிக் காரிமாறன், சடகோபன், திருவழுதி வளநாடன் முதலான பெயர்களும் வழங்கின. நம்மாழ்வார் ஆகிய மாறனைத் தலைவனாகக் கொண்ட அணி நூல் ‘மாறனலங்காரம்’ எனப்பட்டதென்க. இவ்வாறே மாறனப் பொருள், (மாறன்) பாப்பாவினம் என்பனவற்றையும் கொள்க.

ஆசிரியர்

இந் நூலை இயற்றியவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பார். திருக்குருகை என்பது ஆழ்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/387&oldid=1471570" இலிருந்து மீள்விக்கப்பட்டது