346
உரையும் எடுத்துக்காட்டும்
நூலாசிரியரே தண்டியாசிரியர் போல எடுத்துக் காட்டும் அமைத்தார் என்பது புலப்படுகின்றது. “இந் நூலாசிரியர் இவ்வுதாரணம் யாண்டுப் பெற்றார் எனின்” என்று உரையில் வருவதால் இதனை அறியலாம். இந்நூலில் பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு புறநானூறு, குறுந்தொகை, அகநானூறு, திருக்குறள், நாலடியார், சிந்தாமணி, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், திருவாய்மொழி ஆகிய நூல்களில் இருந்தும், தாமியற்றிய திருக்குருகை மான்மியம், நம்பெருமாள் மும்மணிக்கோவை, மாறன் கிளவிமணிமாலை என்பவற்றிலிருந்தும், இந்நூலின் உரையாசிரியர் இயற்றியதாக எண்ணப்படும் பாப்பாவினத்தில் இருந்தும், திருப்பதிக் கலம்பகம் என்னும் பெயரியதொரு நூலில் இருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன.
உரையாசிரியர்
இந்நூலின் உரையாசிரியர் தென் திருப்பேரைக் காரி ரத்தின கவிராயர் என்பவர். இவர் ஊராகிய தென் திருப்பேரை ஆழ்வார்திருநகரிக்குக் கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. இவர் திருக்குருகைப் பெருமாள் கவிராயரை அடுத்துக் கல்வி கற்றார். ‘காரி ரத்தினம்’ என்பது காரிமாறனாகிய நம்மாழ்வாரின் பெயரேயாகும்.
இவர், எடுத்துக்காட்டுச் செய்யுள்களிலுள்ள உள்ளுறை உவமம், ஏனை உவமம், இறைச்சி ஆகியவற்றை நன்கனம் விளக்குகிறார். குறிப்புரை, பொழிப்புரை வேண்டுமிடங்களில் தருகின்றார். இஃது இன்னார் மதமெனக் கூறிச் செல்கிறார். எடுத்துக்காட்டினை நூற்பாவின் பொருளொடு பொருத்திக் காட்டுகிறார்.
தொல்காப்பிய நுண்பொருள்மாலை, பரிமேலழகர் நுண்பொருள்மாலை என்பவை இவரியற்றிய பிற