பக்கம்:இலக்கண வரலாறு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

நூல்கள். பாப்பாவினத்திற்குக் குறிப்புரையும் நம்பெருமாள் மும்மணிக்கோவைக்கு உரையும் கண்டவர் இவர்.

உரையாசிரியர் சிறப்பு

உரைப்பாயிரமாக வரும் கலித்துறை இவர்தம் சிறப்பை வலியுறுத்தும்:

“தருகாள மேகம் கவிராய ராயன் சடையனன்பாற்
குருகா புரேசர் புனையலங் காரம் குவலயத்தே
கருகாத செஞ்சொ லுரைவிரித் தான் கற்ப காடவிபோல்
வருகாரி ரத்ன கவிராயன் பேரை வரோதயனே”

என்பது அது.

“கவிராச கேசரியான பேரைக் காரி ரத்தின கவிராயர் உரையெழுதினது என்றறிக” என்னும் பொருளணியியலுரை நிறைவுச் செய்தியால் இவர் கவிராசகேசரி எனப்படுதல் அறிக.

நன்மாணவர்க்குப் பளிங்கு, அன்னம், பரவை (கடல்), முகில் ஆகியவற்றையும், மாணவராகார்க்கு ஆடு, பந்து, முகவை, கரையிலாக்குளம் ஆகியவற்றையும் உவமை கூறுகிறார். பெரிதும் புதிய உவமைகள்.

நூல் நுவல்தலைப் பற்றி ஆசிரியர் கூறுவதும், உரை செல்வதும்:

“....அஞ்சிறைப் பறவையின் அணைந்துறத் தழுவியும்
வெஞ்சிறைப் படுபுனன் மீன்போல் நோக்கியும்
அகன்றன னாமெனின் ஆமைபோன் றுன்னியும்
புனிற்றா வெனஅவன் புலந்தனின் முன்னியும்...”

“பறவைபோல் அணைத்துத் தழுவியும் மீன்போல் நோக்கியும் விட்டு நீங்கிய காலத்தும் ஆமைபோன்று உளத்தால் நினைத்தும் ஈன்றணிமைப் போதினில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/392&oldid=1474350" இலிருந்து மீள்விக்கப்பட்டது