பக்கம்:இலக்கண வரலாறு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

349

“வாக்கு வன்மை வேண்டி வளையாபதியாரை நினைத்தார்”' என்பார் தக்கயாகப் பரணி உரையாசிரியர். இவர் முதலியல் தொடக்கத்தில் திருப்பாவை தந்த திருப்பாவையை நினைத்து வாழ்த்துகிறார். தம் நூல் திருப்பாவையெனத் திகழ வேண்டிப் போலும்!

“திருப்பாவை என்னத் திருந்தியற் பாத்தந்த
திருப்பாவை வில்லிபுத்தூர்ச்செல்வி—அருட்பார்வை
வாய்ந்ததனாற் செய்யுள் வழக்கென் றிரண்டிடத்தால்
ஆய்ந்துரைப்பல் செய்யுள் அணி”

என்பது அது.

பதிப்பு

மதுரைத் தமிழ்ச் சங்க வெளியீடாக 1913 இல் முதற் பதிப்பு வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 1929 இல் வந்தது. பதிப்பாசிரியர் திருநாராயண ஐயங்கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/394&oldid=1474352" இலிருந்து மீள்விக்கப்பட்டது