பக்கம்:இலக்கண வரலாறு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351


எனவரும் பாயிரத்தால் கொல்லம் 727 சித்திரை நாளில் அரங்கேற்றப் பெற்றதென்றும், சீநிவாசசீயர் என்னும் தம் ஆசிரியர் முன்னிலையில் அரங்கேற்ற மாயதென்றும் அறிந்து கொள்ளலாம். கொல்லம் 727 என்பது கி.பி. 1552 ஆகும். மாறனலங்காரம் இயற்றியபின் நான்கு ஆண்டுகள் கழித்து இந்நூல் இயற்றப்பட்டதென அறியலாம்.

நூலளவு

மாறனகப் பொருளிலுள்ள இயல்கள், அவற்றிலுள்ள பாடல்கள் ஆகியவை இரண்டு வெண்பாக்களால் அறிய வருகின்றன.

“மன்னும் அகத்திணையே மாண்பார் களவியலே
துன்னும் வரைவியலே தூத்தொடியே!-பின்னமறக்
கூறத் தருகற்பே கோதீர் ஒழிபியலே
மாறன் அகப்பொருளின் வைப்பு”

“ஐந்திணைசேர் மாறன் அகப்பொருவிற் சேருமியல்
ஐந்தாம்நூற் பாவெண் அடைவாசுப்-பைந்தொடியே!
முந்நூற்று அறுபத்து மூன்றாம் முதல்இறுதி
உந்துவட வோர்கடனே ஓர்”

இயல்கள் ஐந்து: அகத்திணை இயல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல்.

பாடங்கள்: ஐந்தியலுக்கும் நூற்பா 363.

நூலின் முதற்சொல் “வட” என்பதும் இறுதிச் சொல் "கடனே” என்பதுமாம்.

“வடதிசை வேங்கடம் தென்திசைக் குமரி” என்பது மாறனகப் பொருளின் பாயிரத் தொடக்கமாகும்.

இந்நூலின் அகத்திணையியல் கிடைத்திலது. ஓழிபியலும் கிடைத்திலது. எஞ்சிய மூன்றியல்களே கிடைத்துள. இதனை நோக்க ஒரு குறிப்பு வெளிப்படுகின்றது. இலக்கணமும், இலக்கண ஒழிபும் கூறிய பகுதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/396&oldid=1474405" இலிருந்து மீள்விக்கப்பட்டது