பக்கம்:இலக்கண வரலாறு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

26. பாப்பாவினம்


பாவும் பாவினமும் பற்றிக் கூறும் நூல் ‘பாப்பா வினம்’ எனப்பட்டது. இது மாறன் பாப்பாவினம் எனவும் வழங்கும்.

ஆசிரியர்

மாறனலங்காரம், மாறனகப் பொருள் ஆகியவற்றை இயற்றிய திருக்குருகைப் பெருமாள் கவிராயரே, காரி மாறராம் நம்மாழ்வாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடிய நூலாகும். இதனைக் காரி இரத்தின கவிராயர் இயற்றிய தென்பாரும் உளர். ஆனால் முன்னவரே இயற்றினார் என்பது ஆய்வாளர்கள் முடிபு.

நூலாசிரியர், பாட்டுடைத் தலைவர் செய்திகளை மாறன் அலங்காரப் பகுதியில் காண்க.

ஒரு குறிப்பு

ஆசிரியப்பாவின் நிறைவில், “இனி, கோயிற் கலம்பகத்துள் கரைபொரு தொழுகும் காவிரியாறே என்னும் அகவல்போல இடை இடை தனிச்சொல் பெற்று முதலே அடி—ரு அந்தாதிப்பதாக ஓரகவல் பாட வேணும். இரண்டாவது இவ்விரண்டடியாய் ஏழும் எட்டுத் தான தானமாகி ௯-ஆந் தானம் ஆறடியாய் நேரிசையாசிரியப் பாவாய்ப் பாட வேணும். ஆசிரியப்பா முற்றும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/399&oldid=1466702" இலிருந்து மீள்விக்கப்பட்டது