பக்கம்:இலக்கண வரலாறு.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

சிவஞான முனிவர் இதனை மறுத்தார் என்பது அறியத்தக்கது.

நூலியல்

தாம் நூல் செய்து பதிகம் இயற்றி உரையும் எடுத்துக் காட்டும் கூறிய வழியை உரைக்கிறார்.

“வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார். இந்நூலும் வடநூலைத் தற்பவமாகச் செய்தலான் யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினாம். தண்டியாசிரியர் மூலோதாரணங் காட்டினாற்போல யாமும் உரையெழுதிய தல்லது மூலோதாரணமும் காட்டினாம். இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினோரும் திவாகரரும் பதினெண் கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப் பின்னாகப் பதிகங் கூறுவது காண்க” என்று தாம் முன்னும் பின்னும் பதிகம் கூறுவதற்கும் காரணம் இயைக்கிறார். வேற்றுமையைப் பற்றிக் கூறுவது காரகபடலம். தொகைச்சொல் பற்றிக் கூறுவது சமாக படலம். தத்திதாந்தச் சொற்களைப் பற்றிச் சொல்வது தத்தித படலம். வினைமுற்றுகளைப் பற்றிச் சொல்வது திங்ஙுப் படலம்.

தமிழ்

வடமொழிக்கும் தென்மொழிக்கும் உள்ள வேறுபாடுகளை அறியாரும் அல்லர் இவர்:

“சாற்றிய தெய்வப் புலவோர் மொழிக்கும் தமிழ்மொழிக்கும்
வேற்றுமை கூறில் திணைபால் உணர்த்தும் வினைவிகுதி
மாற்றரும் தெய்வ மொழிக்கில்லை பேர்க்கெழு வாய்உருபும்
தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே”

என்று கூறியும் இலக்கணம் ஒன்றென்று நாட்டவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/409&oldid=1474417" இலிருந்து மீள்விக்கப்பட்டது