பக்கம்:இலக்கண வரலாறு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



 

29. இலக்கண விளக்கம்


திருவாரூர் வைத்தியநாத தேசிகர் என்பாரால் இயற்றப்பட்ட இலக்கண நூல் இது. இதில் ஐந்திலக்கணங்களும் கூறப்பட்டுள. பின்னாளில் தனி நூலாகச் செய்யப்பட்ட பாட்டியலும் இதன்கண் இடம் பெற்றுளது. இதன் பரப்பையும், இலக்கண முழுமையையும் அறிந்து ‘குட்டித் தொல்காப்பியம்’ என்று வழங்குவாராயினர்.

வரலாறு

வைத்தியநாத தேசிகர் திருவாரூரினர் என்பது பெயர்க்கு முன்னுள்ள அடையானே விளங்கும். இவர்தம் தந்தையார் வன்மீகநாத தேசிகர் என்பார். தம் தந்தையாரிடமே முதற்கண் கல்வி கற்றுப் பின்னர்த் தம் தந்தையாரின் மாணவராகிய அகோரமுனிவர் என்பாரிடத்துக் கற்று இருமொழிப் புலமையும் மெய்ப்பொருள் திறமும் மேம்பட்டு விளங்கினார். தேசிகர் தம் தவநிலை, ஓகநெறி என்பவற்றைக் கண்டு வியந்த முனிவர், தாமே அவர்க்கு மாணவராகி அமைந்தார். படிக்காசுப்புலவரும் இவர் மாணவர் என்பர்.

உரிய காலத்தில் வைத்தியநாதருக்குத் திருமணம் நிகழ்ந்தது. துணைவியார் தங்கம் என்பார். குடிநலன் காக்கப் பொருள் தேடும் நோக்கில் அந்நாள் ஆட்சியில் இருந்த திருமலை மன்னரின் செயலராக விளங்கிய கயத்தாற்றுத் திருவேங்கடநாத ஐயர் என்பாரை அடுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/411&oldid=1471531" இலிருந்து மீள்விக்கப்பட்டது