பக்கம்:இலக்கண வரலாறு.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372


வேறுபாடு

சார்பெழுத்து மூன்று என்றார் தொல்காப்பியர். நன்னூலார் பத்து என்றார். இவர் ஒன்பது என்கிறார் (எழுத்.5). இவர்தம் உரையியல் அறிதற்கு அப்பகுதி விளக்கம் வருமாறு:

“எழுத்து எனத் தொகையால் ஒன்றும், முதல் எழுத்து சார்பெழுத்து என வகையான் இரண்டும் அவ்விரண்டன் பகுதியும் கூட்ட விரியான் தமிழ் எழுத்து இருநூற்று எழுபதுமாம் என உய்த்துணர்க.

“மூன்று சார்பெழுத்து என்ற ஆசிரியர் தொல்காப்பியனாரும் ஏனைய ஆறனையும் பின்னர் ஒருவாற்றான் தழுவுதலானும் மூன்றாவது ஒரு பகுதி இன்று ஆதலானும் முதல் எழுத்தாம் தன்மை இவற்றிற்கு இன்மையானும் சார்பில் தோன்றுதலானும் இவ்வாறனையும் அவற்றோடு தலைப்பெய்து ஒன்பதும் சார்பின் பால என்றார் இவ்வாசிரியர் என்பது.

“அற்றேல் ஆசிரியர் செய்யுளியலுள் கூறிய ஒற்றளபெடையை இவர் ஈண்டுக் கூறியது என்னை எனின், அவர் எதிரது போற்றி ஐகாரக் குறுக்கம் முதலியவற்றை எழுத்தோத்திலுள் உரைத்தாங்கு உரைத்ததென்க.

“ஆய்தக்குறுக்கம் ஒன்றுளது என்றும் அதனொடு கூடச் சார்பெழுத்துப் பத்தாம் என்றும் அதன் விரித்தொகை முந்நூற்று அறுபத்தொன்பதாம் என்றும் கூறுவாரும் உளராலோ எனின்” என்று காரணம் காட்டி மறுக்கிறார்.

இதில் சார்பின்பால என்றார் இவ்வாசிரியர் என்பது போல உரையில் பல இடங்களில் வருதலால் இவர் மகனார் உரை வரைந்திருப்பாரோ என்றே தோன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/417&oldid=1474452" இலிருந்து மீள்விக்கப்பட்டது