பக்கம்:இலக்கண வரலாறு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373

கிறது. தந்தையார் உரையை அவரிடமே பாடம் கேட்டு அதனை அவர் வரைந்தார் ஆகலாம். உரை கேட்டிருந்து வரைதலையும் அவருரையாகக் கூறும் ஒரு வழக்குண்மை இறையனார் களவியல் உரையால் அறிய வருவதுதானே. அவ்வாறாயின் நூலுக்குப் பாயிரம் செய்த சதாசிவ நாவலரே உரை வரைந்தவர் ஆகலாம்.

பதிப்பு

இதன் பதிப்பு தாமோதரனாரால் விரோதி யாண்டு (1889) வெளிவந்தது. பின்னர் ஆய்வுரை குறிப்புரைகளுடன் கழகப் பதிப்பும், பலதிற விளக்கம், ஒப்பீடு, இணைப்பு இன்னவற்றுடன் தஞ்சை சரசுவதிமால் பதிப்பாகவும் வெளிவந்தது. அதன் பதிப்பாசிரியர் தி. வே. கோபாலன் ஆவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/418&oldid=1474453" இலிருந்து மீள்விக்கப்பட்டது