பக்கம்:இலக்கண வரலாறு.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30. இலக்கண விளக்கச் சூறாவளி


இலக்கண விளக்கம் என்னும் விளக்கைச் சுழற்றி அணைக்க வந்த சூறைக்காற்று (சூறாவளி)ப் போன்றது என்னும் பொருளில் கிளர்ந்த நூல் இது. இதனை இயற்றியவர் இருமொழிக் கடலும் நிலை கண்டுணர்ந்தவர் எனப்படும் சிவஞான முனிவரர். இவர்தம் வரலாறு காலம் முதலியவை தொல்காப்பியப் பாயிரவிருத்தியில் உரைக்கப்பட்டதே. இவர் காலம் 18 ஆம் நூற்றாண்டு.

கண்டனம்

இலக்கண விளக்கத்திற் கண்ட குறைகளைக் குறித்து எழுதிக் கண்டிக்கும் கண்டன நூலாகவே இந்நூல் வெளிப்பட்டது. இல்லாக்கால், ஒரோ ஒரு நலங்குறித்தேனும் பாராட்டியிருக்கக்கூடுமே! அதனால் போலும் இதனை ‘அநியாய கண்டனம்’ என்கிறார் சி. வை. தாமோதரனார். (இ.வி.).

மறுப்புகள்

எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என இரண்டதிகாரங்களை எடுத்துக் கொண்ட ஆய்வு இது.

பாயிரத்தில் ஒன்றும், எழுத்ததிகாரத்தில் 42-உம், சொல்லதிகாரத்தில் 40-உம் ஆக 83 மறுப்புகள் எழுதியுள்ளார். மறுப்பின் உள்மறுப்புகளும் உண்டு.

“மலைமகள் ஒருபான் மணந்துல களித்த
தலைவனை வணங்கிச் சாற்றுவன் எழுத்தே”

என்பது எழுத்ததிகாரத் தொடக்க நூற்பா. இதில் ‘மலைமகள்’ வெளிப்படையாக விளங்கும் சொல். இதனை, "மலைமகள் என்பது மலையுமகள் எனவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/419&oldid=1474455" இலிருந்து மீள்விக்கப்பட்டது