பக்கம்:இலக்கண வரலாறு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

375


அமங்கலப் பொருள் தந்து” நிற்பதாகக் கூறுகிறார். நின்று நிலவ வேண்டும் நூல், நின்று நிலவாது இறுதல் வேண்டி எனப்பொருள் தருதலை விளக்குகிறார்.

“உறுபொருள் முதலிய எல்லாவற்றுக்கும் வேந்தனை உல்கு பொருட்குரிய வேந்தன் என்றல், அவன் இறைமைக்கு ஏலாதவாறுபோல ஐந்தொழிற்கும் உரிய தலைவனை உலகளித்த தலைவன் என்பது தலையன்மையில் தலைவன் என்னும் பெயர்க்கு ஏலாமையின் உலகளித்தவன் என்பதும்...வணங்குதல் சிறப்பு வினையாவதல்லது பொதுவினையாகாமையின் வணங்கி என்பதும் அவ்வப்பயன் குறித்து வாராமை அறிக.

இவ்வாறு மேலும் சொற்றொறுமுள்ள குற்றங்களைக் கூறின் விரியுமென்றொழிக” (1).

“எண்ணுதற்கும் பெயர் கருவியாகலின் அதனை முற்கூறாதது முறையன்று” (2).

“ஆசிரியர் தொல்காப்பியனார் சார்பெழுத்து மூன்றே என வரையறுத்திருப்பவும் தாம் அவரினும் நுண்ணுணர்வுடையார் போன்று நன்னூலார் கூறிய சொற்பற்றிச் சில முதலெழுத்துக்களையும் அம்மூன்றனோடு கூட்டிச் சார்பெழுத்தெனக் கொண்டார். அது பொருந்தாமை விருத்தியில் விரித்துக் காட்டினாம்; ஆண்டுக் காண்க” (5).

“நன்னூலார் பதவியல் கூறியதற்கு முதனூல் வட நூலாகலின், அது தோன்ற மொழியியல் என்னாது பதவியலென வடசொல்லான் அதற்குப் பெயரிட்டு, அவ்வோத்துள் வடவெழுத்துத் தமிழில் வருமாறு கூறினார். இவர் தமிழ்மொழி மாத்திரைக்கே இலக்கணம் கூறுதுமெனப் புகுந்தமையால் பதவியலென வடமொழியாற் குறியிடுதல் பழுதாம் என்க”.

"இன்னும் இவ்வியன் முழுதிலும் இவர் கூறியவற்றுட் குற்றங்களை விரிக்கப் புகின் விளையாட்டு மகளிர் அட்டமணற் சோற்றிற் கல்லாராயப் புகுதலோடு ஒக்குமென்றொழிக" என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/420&oldid=1474461" இலிருந்து மீள்விக்கப்பட்டது