பக்கம்:இலக்கண வரலாறு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31. இலக்கணக் கொத்து


ஆசிரியர்

சுவாமிநாத தேசிகர் என்பார் இயற்றிய நூல் இது. இவர் பாண்டி நாட்டினர். இளமையிலே திருவாவடுதுறைத் திருமடம் சார்ந்தார். திருநெல்வேலியைச் சார்ந்த பெரும்புலவரும், தாண்டவ மூர்த்தி என்பார் மைந்தரும், நன்னூற்கு உரை கண்ட சங்கர நமச்சிவாயருக்கு ஆசிரியரும் ஆகிய மயிலேறும் பெருமாள் என்பவரிடம் பன்னீராண்டுகள் தமிழ் பயின்றார். செப்பறைப் பதியினராகிய சிவச் செல்வர் கனகசபாபதி என்பாரிடம் வடமொழி கற்றார். திருவாவடுதுறையில் தீக்கை பெற்றுப் பொருள் நூற் பயிற்சியிற் சிறந்தார். பின்னர் ஆசாரிய நிலை பெற்றுத் திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். அதனால் இவர் ஈசான தேசிகர் எனவும் வழங்கப்படுவார்.

இவர் காலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலின், 17 ஆம் நூற்றாண்டு என்க. இவர் இந்நூலையன்றித் தசகாரியும் முதலிய நூல்களும் செய்துள்ளார்.

வரலாறு

இவர் தம் புலமைச் சிறப்பை விளக்குவது போல் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது: இலக்கண விளக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/423&oldid=1474474" இலிருந்து மீள்விக்கப்பட்டது