பக்கம்:இலக்கண வரலாறு.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

380

பாயிரம் மூத்த பிள்ளையார் வணக்கம் (1) முக்கணான் வணக்கம், வேலன் வணக்கம் (2), திருவாவடுதுறைத் திருமடத் தலைவரும் சமய குருவரும் ஆகிய அம்பலவாண தேசிகர் வணக்கம் (3) வடமொழியாசிரியர் வணக்கம் (4), தமிழாசிரியர் வணக்கம் (5), அவையடக்கம் (6), நூல் பார்த்தற்குக் கருவி (7-9), நூலுணர்த்துவோர்க்குக் கருவி (10), நூல் உணர்வோர்க்குக் கருவி (11), நூலியலும் குறிப்பு (12) என்பவற்றைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் மொத்த அடிகள் 185. இவற்றின் உரையும் விரிவுடையதே.

நூல், வேற்றுமையியல் (52), வினையியல் (22), ஒழிபியல் (45) என மூவியல்களையுடையது. எல்லாமும் நூற்பாவான் இயன்றன. சிறப்புப் பாயிரம் ஒன்றும் நீங்கப் பாயிரத்துடன் மொத்தம் 131 நூற்பாக்களையுடையது நூல்.

தமிழ்க் குருவர்

மயிலேறும் பெருமாள் பிள்ளை சுவாமிநாத தேசிகரைக் கண்ட அளவான் ‘இளமைப் பருவத்தே இத்தகு திறம் அமைதல் அருமை’ என உணர்ந்து, ‘நாம் கற்ற கலைப் பொருளை வெர்க்குக் கற்பித்தல் பெரும் பயனாம்’ எனத் தெளிந்து திருமடத் தலைவரிடம் வேண்டிக் கொண்டு தம் இல்லிலே தம்முடன் உடன் வைத்துப் பன்னீரியாண்டு கற்பித்து அதன் பின்னரும் வட மொழியிலும் இவர் திறவோராக வேண்டும் என்று தெளிந்து செப்பறைப்பதிக் கனகசபாபதி சிவாச்சாரியாரிடத்து ஆற்றுப்படுத்தவரும் அவரே. மேலும் திருமடத் தலைவரிடம் இவர் கலைத் திறத்தைக் காண்பிக்கச் செய்து மெய்ந்நூற் பயிற்சி பெறவும், ‘ஞானாசிரியராக’ ஆக்கவும் தூண்டித் துலக்கியவர் அவரே. அத்தகையரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/425&oldid=1474476" இலிருந்து மீள்விக்கப்பட்டது