பக்கம்:இலக்கண வரலாறு.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

381

“திருநெல் வேலி யெனும் சிவ புரத்தன்
தாண்டவ மூர்த்தி தந்தசெந் தமிழ்க்கடல்
வாழ்மயி லேறும் பெருமாண் மகிபதி
இருபத கமலம் என்றலை மேற்கொண்
டிலக்கணக் கொத்தெனும் நூலியம் புவனே”

என்று பாராட்டுவது ‘தகும்’ என, இவர்தம் நன்றியுணர் நெஞ்சை மதிக்கிறோம்.

“நிறைந்த கல்வியுடையார் மாட்டுச் செல்வம் வாணாள் அதிகாரம் முதலிய நலங்கள் குறைதல் பெரும்பான்மை. இவனுக்கு ஓர் குறையுமில்லை என்பது தோன்றப் பெயர்க்கு முன்னும் பின்னும் அடை கொடுத்தாம்” என்று இவர் எழுதுவதைக் கண்டு மேலும் மதிக்கிறோம். ஆனால், உட்கிடையாக இவர்க்கு வடமொழியில் தாழ்ந்தது தமிழ் என்னும் கருத்து உண்மையாய், வடமொழிக் குருவர்க்குப் பின்னரே தமிழ்க் குருவராம் இவரை வைத்தார் என்பதை நினைக்க அம்மதிப்பெல்லாம் ‘சூறையிற் பஞ்சென’ ஆகின்றதாம். ஆளுடைய பிள்ளையாரும், ஆளுடைய அரசும், ஆளுடைய தோழருமாகிய மூவர் முதலிகள் பாடிய தேவாரம் — அருச்சனை பாட்டேயாகும் என்ற தேவாரம் — கோவிலுக்குள் தீண்டத்தகாததாக இருக்கும் நிலையை எண்ணும்போது, இம்முறைவைப்பைச் செய்த சுவாமிநாத தேசிகர் மறுதலைச் செயல் நெஞ்சம் வெளிப்பட்டு விடுகின்றது.

முறைகேடு

எத்துணைப் பேரறிஞர் தேசிகர்! மொழிமாறுபாடு, நூன் மாறுபாடு, இயல்மாறுபாடு, நூற்பாமாறுபாடு, விதி வேறுபாடு, உரை மாறுபாடு இவையெல்லாம் “முக்குண வசத்தால் முறைமறந்தறைவர்” என எவ்வளவு திட்ப நுட்பமாகக் கூறுகிறார் (6).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/426&oldid=1474479" இலிருந்து மீள்விக்கப்பட்டது