பக்கம்:இலக்கண வரலாறு.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

383

புராணம், சிவஞான போதம், சிவஞான சித்தியார், சிவப் பிரகாசம், பட்டணத்துப் பிள்ளையார் பாடல் அவைகளை விரும்புதல் என்னெனின், பாற்கடலுட் பிறந்து அதனுள் வாழுமீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புவது போல அவரது இயற்கை என்க” என்றும் எழுதுவதை நோக்க, ‘பிளவு பட்ட கூரை பிழைக்காது’ என்று அமெரிக்க நாட்டுத் தலைவர் ஆபிரகாம் இலிங்கன் கூறியதே நினைவில் எழுகின்றது. இத்தகு தீமைகளே, தமிழ் நாட்டுக்கோயில் மொழியாகவும், இருவினைச் சடங்கு மொழியாகவும் வட மொழியைக் கண்மூடிப் பின்பற்ற வைத்தன என்பது விளங்கும்.

“முன்னூல் ஒழியப் பின்னூல் பலவினுள் நன்னூலார் தமக்கு
எந்நூலாரும் இணையோ என்னும் துணிவே மன்னுக”

என்று அடுத்த நூற்பா உரையில் பாராட்டு எழுதுபவர் (8) இந்நூற்பா உரையுள் (7) நன்னூலை விட்டு வைத்தாரா? இப்படியா தட்டுக் கெட்டுப் போகும், கட்டு விடாக் கல்வித் திறம்?

எண்ணாயிரவரைக் கழுவேற்றுதலை, ‘ தீவினை நல்வினை’யாதற்கும் கணவன் இழந்தோர்கட்கு இரங்குதலை ‘நல்வினை தீவினை’யாதற்கும் இவர் காட்டுதல் கொடுமையாக உள்ளது (81).

சில குறிப்புகள்

தெரிவினையைச் சொல்லால் தெரிவினை, பொருளால் தெரிவினை எனப் பகுத்துக் காட்டி எடுத்துக் காட்டுத் தருகிறார் (73).

மறை மூவகையாதலை முற்று, பெயரெச்சம், வினையெச்சம் மூன்றற்கும் மூவகையால் காட்டுகிறார் (74).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/428&oldid=1474482" இலிருந்து மீள்விக்கப்பட்டது