பக்கம்:இலக்கண வரலாறு.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

391


பிறர் நோய் கண்டு அகத்து இரங்கான் ‘ஐயோ’ என வாய் பொய்த்த இரக்கம் காட்டல் தயையோ?

நெஞ்சங் கடுத்த கடும் பகை கொண்டான் முகநக நட்பது நட்போ?

ஒன்றீந்து ஒரு பத்து அடித்துக் கொள்ளத் துணிந்தான் பிறர்க்கு ஈந்து உதவுதல் கொடையோ?

மனை நகர் நாடும் அகல நீக்கியும் பொருளின்பம் அணுகும் ஆசை நீங்கான் மறுதுணையில்லா வனம் புக்குறைதல் துறவோ?

பிணியுறப் பசிமிகப் பகைப்பட மொய்த்த துன்பம் இன்பம் என உணர்ந்து அகங்கலங்காதான் புறத்தும் புலம்பாதிருப்பது பொறையே!

பிறர் அழகாசை மனம்புகாத் தன்னிறை காத்த மகளிர் புறத்துக் காட்டும் ஒடுக்கமும் கற்பே!

தன்மாக் கோட்டங்கண்டு நாணுதல் நாணமே!

மனத்தில் இறைஞ்சிப் பிறரைப் பணிவான் புறத்துப் பொய்யாச் சொல்லின் வணக்கமும் பணிவே!

உளத்திற் கலங்காது எதிர் வெம்போர் முகத்து அஞ்சான் துணிவாய சேவகந்தானும் வீரமே! இவ்வாறு அனைத்தறன் மனத்துக்கண் மாசிலன் ஆதல் ஆகு மன்றோ! என்பது. இவையும் இத்தொடக்கத்தன பலவும் வகையகத் திணையாம்.

மனமாசிலா அறவிளக்கம் இப்பகுதியாதல் அறிக. பிற வுரையார் கொள்ளாவகை உரைகொண்டுரைத்த பான்மை விளங்கும்.

பதிப்பு

1838 இதன் முதற்பதிப்பு புதுவையிலும், 1864 இல் நாகையிலும், 1891 இல் சென்னையிலும் பதிப்பிக்கப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/436&oldid=1474533" இலிருந்து மீள்விக்கப்பட்டது