பக்கம்:இலக்கண வரலாறு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395

என்பது இதிலுள்ள கடவுள் வாழ்த்து. ஐந்து முகத்தனை வணங்கும் இவர் முறைமை கூறு முகத்தான் சிவனையும் முருகனையும் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். இவர் தம் சமயம் இதனால் அறியவரும்.

சில புதிய நூல் வகைகள்

இப்பிரபந்தத்திரட்டில் புதுமையான பல நூல் வகைகளுக்கு இலக்கணம் இடம் பெற்றுளது. சிலவற்றிற்கு இலக்கியம் உண்மை அருமையோ எனவும் எண்ணத் தோன்றுகின்றது. ஆசிரியர் புதிது படைக்கும் தேர்ச்சியர் என்பதற்கு இப்பெயர்களும் இலக்கண வரைவும் சீரிய சான்றுகள்; பிற பாட்டியல்களில் காணாதவை.

இலட்சுமி விலாசம், ஆடாமணி, தடாக சிங்காரம், சடானனம், ஏகாங்கிரி, பொய்மொழி அலங்காரம், மெய்மொழி அலங்காரம், தெய்வக்கையுறை, குறியறி சிந்து, பண்ணை விசித்திரம், புறநாட்டுச் செய்கை, ஏடார் தாமரை, வாடாத மலர், மஞ்சரி, மாதிரக்கட்டு, காமச்சிகழிகை, வச்சிராங்கி, சகத்திராங்கி, சிந்து மோகினி, தமிழ்சொரி சித்தாமணி, உபயசெயம், விடய சந்திரோதயம், விசயலித்தாரம், மானதவம், பிரிவுசுரம், வேடர் விநோதம், கன்னிகா மயக்கம், வசன சம்ப்ரதாயம், திருப்பெயர்ப் பொறி, கனவுகன்னி, காதலெதிர் மொழி, வனமாதங்கி, இரவிடையீடு, பலதொகை, இந்திரசாலம், திருவடிச்சுவடு—இவை போல்வன இந்நூலால் அறியப்பெறும் புதிய நூல் வகைகள்.

“வாயின் மணிநா அசையாமல் செய்மின்ளாள்
வாயின் மணிமுற் றுறநவசைக்க — வேயிறைவன்
பூசலிட்டுப் பின்மேவப் பூட்டி உரைப்பதுவே
வாசமிகும் ஆடா மணி”
(9).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/440&oldid=1474537" இலிருந்து மீள்விக்கப்பட்டது