பக்கம்:இலக்கண வரலாறு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

“கலிப்பாவும் தாழிசையும் நான்மணிமேற் காட்டல்
நலத்துறுச டானன நற்பா-வலிக்காவிற்
காலற்ற லேகாங் கிரி கலிவெண் பாச்சிந்தாய்க்
கோலுற்றார் நொண்டியென்று கொண்டு”

என்பது சடானனம், ஏகாங்கிரி (நொண்டி) என்பவற்றைப் பற்றியது (13).

ஒலியந்தாதி கூறியபின் காப்பியப் புறநடை என்று திரட்டு முடிவதாய் உள்ளது. இதனால், திருமுகம், சமுகம், காதலெதிர் மொழி, வனமாதங்கி, இரவிடையீடு, ஆன்மநிலை, பலதொகை, இந்திரசாலம், திருவடிச் சுவடு என்னும் ஒன்பதன் இலக்கணப் பகுதி இடையே விடுபட்டுள்ளது.

பெரும் பேராசிரியர் உ. வே. சாமிநாதையர் நூலக ஏட்டுச்சுவடி கண்டு எழுதப்பட்டது இது. இந்நூல் அச்சாயிற்றில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/441&oldid=1474706" இலிருந்து மீள்விக்கப்பட்டது