பக்கம்:இலக்கண வரலாறு.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35. இரத்தினச் சுருக்கம்


பெயர்

"புகழேந்திப் புலவர் இயற்றிய இரத்தினச் சுருக்கம்" என நூல் தலைப்பில் உள்ளது. இதுவும், 1871இல் ஊ. புட்பரத செட்டியாரால் தமது சென்னை , கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது" என்ற குறிப்புடன் உள்ளது. மணிபோன்ற செய்திகளைச் சுருக்கித் தரும் நூல் என்னும் பொருளுடையதாகலாம்.

நூல்

“பழைய பிரதிகளுள்ளே சிலவற்றுள் 28 பாடல்களும், சிலவற்றுள் 71 பாடல்களும் இருக்கின்றன” என்று நூற் குறிப்புள்ளது. இப்பதிப்பு 71 பாடல்களையுடையதாம்.

பாடல் வகை வெண்பா 38; கட்டளைக் கலித்துறை 28; அறுசீர் விருத்தம் 4; முருரு விருத்தம் 1. ஆக எழுபத் தொன்று.

செய்தி

பிரிவாற்றாமைக்குரிய குறிகள், பிரிவுப்பகை, பிரிவில் நீங்குவன, துயர்க்கு ஏது, தூது, மன்மதன் மாலை, கணை, கணைச் செயல், கண்ணின் இயல்பு, கண் முதலிய உறுப்புகளுக்கு உவமை (உவமான சங்கிரகம் போல) மகளிர் விளையாட்டிற்குரியன, பாணர் பெறுவன, ஒன்பான் சுவை, ஐவகை மணம், ஐவகைப் படுக்கை, எண்வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/442&oldid=1474708" இலிருந்து மீள்விக்கப்பட்டது