பக்கம்:இலக்கண வரலாறு.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

மணம், முத்துப் பிறப்பிடம், திருமகள் இருப்பிடம், மன்மதன் கணையெய்யும் வகை, வேள் நகர்க்கு அடையாளம், மகளிர் கைவினை, மகளிர் பருவம், மகளிரான் மலரும் மரம், திணையும் திணைக்குரியனவும், எண்போகம், இன்பவகை, செல்வம், விருந்து, பேறு, அறம், தசாங்கம், மங்கலம் ஆகியவற்றின் வகைகள், ஆடவர் மகளிர் சிறப்புவமை, சிவன் பெருமை, பிள்ளையார் பெருமை, முருகன் பெருமை, திருமால் பெருமை, நான்முகன் பெருமை இவற்றை முறையே கூறுகின்றது. நிறைவில் நூற்பயன் கூறப்பட்டுள்ளது. அது:

“உணரும் படியே உரைத்தவற்றை எல்லாம்
இணர் மென் தொடையாம் இயல்பால் — துணையெழுத்தாற்
சொல்லாயச் சொல்லின் தொகுதி தனைத்தொடுக்க
வல்லார்க் கணிபெறலா மால்”

இந்நூல் மெய்ப்பாட்டியல், உவமையியல், பாட்டியல், தொகையகராதி இவற்றின் பொருள்களை எடுத்துச் சிலச்சில மொழிவதாக இயல்கின்றது.

இருவகை நூல்கள்

28 பாடல்கள் அமைந்த பிரதியும் இருந்ததாக அச்சுநூல் குறிப்புள்ளதும், கட்டளைக் கலித்துறை 28 இருப்பதும் அவற்றை மட்டுமே யுடையதொரு தனி நூல் இருந்திருக்க வேண்டும் என்றும், வெண்பா நூல் ஒன்று தனியே இருந்திருக்க வேண்டும் என்றும் கருதச் செய்கின்றது. நூலின் பாவகை மாற்றத்துடன் பொருள்வகை மாற்றமும் இக்கருத்துக்கு இடமாகவே அமைகின்றது.

ஆசிரியர்

புகழேந்தியார் பெயரால் மாலைகள் சில வழங்குகின்றன. சில சிறு நூல்களும் அவர் பெயரால் பிறர் கட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/443&oldid=1474709" இலிருந்து மீள்விக்கப்பட்டது