பக்கம்:இலக்கண வரலாறு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

401

மொழிக்குப் பதினான்கு உவமையும், மார்புக்கு இருபது உவமையும் சொல்கிறார். இவ்விரண்டுமே மிகுதியாம் உவமைகள் (5,8). மொழிக்குக் கூறும் உவமைகள்:

நாட்டுங் கதலி நடுக்கரும்பு மாவருக்கை
காட்டும் குயில்கிள்ளை கற்கண்டு—வேட்டருந்தும்
சீனி சருக்கரைசெந் தேனமுதம் பால்குழல்யாழ்
ஆனபதி னான்குமொழிக் காம்
.

மகளிர் உறுப்புக்கு உவமை கூறவே ஒரு நூல் எழுந்தமை வியப்பே. ‘உவமை’ என்பது ஓரணி நூலாக விரிந்தது. அவ்விரிவு இன்னதற்கு இன்னது உவமை எனக் காட்டும் ‘பொறிவினை’ போல அமைந்தகை அணி வறுமைக்கும் கற்பனை அழிவுக்கும் இடம் தந்தது எனலாம்.

ஒரு குறிப்பு

ஆடவர் உறுப்புகளுக்கு ஏன் இப்படி உவமைகள் தொடுக்கப் படவோ — தொகுக்கப் படவோ — இல்லை? நூல் இயற்றுதலைத் தம் கைப்பொருளாக வைத்திருந்த ஆடவர்க்கு ஆடவர் உறுப்புகளை உவமைப் புனைவாக்கி உவகை யெய்துதல் இன்பமாக இராமையால், இவ்வகை உவமைகளை எண்ணற்ற சிற்றிலக்கியங்களில் கூறிக் கூறித் தாம் பெற்ற இன்பத்தைப் பாட்டுடைத் தலைவரும் கேட்டு வருவோரும் எய்தச் செய்தனர். உலா, காதல் இன்ன நூல்களின் வண்ணனைப் பெருக்கமே இத்தகையதொரு நூல்வகையைத் தந்ததென்க.

பதிப்பு

1871 இல் ஊ. புட்பரத செட்டியாரால் தமது சென்னை கலாரத்நாகர அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுளது இவ்வுவமான சங்கிரகம்.

இ. வ-26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/446&oldid=1474715" இலிருந்து மீள்விக்கப்பட்டது