பக்கம்:இலக்கண வரலாறு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37. முத்து வீரியம்


ஐந்திலக்கணமும் கூறும் நூல்களுள் ஒன்று முத்து வீரியம். ஆசிரியர் பெயர் முத்துவீர உபாத்தியாயர். இவர் பெயரால் அமைந்தது இந்நூல்.

ஆசிரியர்

முத்து வீரரை, ‘முத்து வீரமாமுனி’ என்று சிறப்புப்பாயிரம் கூறுகின்றது. இவர் திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த உறையூரினர். அவ்வூரில் வண்டிக்காரத் தெருவில் இருந்தவர். பிறந்த குடிபற்றி அந்நாளில் அவ்வூரார் ‘கம்மாள வாத்தியார்’ என்று அழைத்தமை அறிய வருகின்றது. இவர் இறுதிக் காலத்தில் சென்னையில் வாழ்ந்தவர் என்றும், திருச்சி அமிர்தம் பிள்ளை, உறையூர் பிச்சை இபுராம் புலவர், சோமசுந்தர நாயகர் ஆகியோர்க்கு ஆசிரியர் என்றும் கூறுவர். இவர் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு.

சமயம்

இந்நூலின் ஐந்ததிகாரங்களின் முகப்பிலும் தற்சிறப்புப் பாயிரங்கள் உள்ளன. அவை முழு முதல் இறையின் இயல்புகளை இயம்புகின்றன. பெயர் வகையான் குறியாமை இவர்தம் பொதுப்பான்மை வெளிப்படுத்தும். ஆனால், “சங்கரன் மிலைந்த கங்கையில் வந்தோன் சுப்பிர மணியதே சிகன்கவிப் பெருமான்” வேண்டிக் கொண்டபடி முத்துவீரியம் இயற்றப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/447&oldid=1474717" இலிருந்து மீள்விக்கப்பட்டது