பக்கம்:இலக்கண வரலாறு.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

404


பெடை, சொல்லிசை அளபெடை, நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை, எழுத்துப்பேறளபெடை என்பன. உயிரளபெடை, ஒற்றளபெடை என்னும் இரு வகை அளபெடையே கொண்டு, உயிரளபெடையுள் இன்னிசை, சொல்லிசை, செய்யுளிசை என மூவகைப் படுத்துதல் பழவழக்கு. இனி இயற்கை, செயற்கையளபெடை என்பவும் இவற்றுள் அடங்குவதே. எழுத்துப் பேறளபெடையும் இப்பகுப்பும் புதியவை.

ஆய்த எழுத்தின் பிறப்பிடம் தலை என்றும், மெல்லின எழுத்தின் பிறப்பிடம் மூக்கு என்றும் நன்னூலார் கூறுவார். இவர், மெல்லினம் தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் என்கிறார் (43). ஆய்தம் உத்தியிடமாகப் பிறக்கும் என்கிறார் (58).

சகரம் அ, ஐ, ஒள என்னும் மூன்றெழுத்துகளுடன் வாராது என்பது தொல்காப்பியம். ஆனால் நன்னூலார் சகரம் பன்னீருயிருடனும் வரும் என்றார். அவ்விதியையே மேற் கொண்டார் இவர் (61).

“உகர ஊகாரம் நவவொடு நவிலா”

என்பது தொல்காப்பியம். இதனைப் பாயிர விருத்தியில் ஆயும் அரசஞ் சண்முகனார், உகரம் நகரத்தோடும், ஊகாரம் வகரத்தோடும் வாராது என்று நிரனிறைப் பொருள் கண்டார். முத்து வீரியர்,

“உ ஊ நகரமோ டுறாவென மொழிய”

என்கிறார் (87). இது மேலும் ஆய்வுக்குரியதே என முத்து வீரிய விளக்கவுரையாசிரியர் குறிப்பிடுகிறார்.

நன்னூலிலும் பன்மடங்கு வடமொழி இலக்கணக் கூறுகள் பெருகியுள்ளமை மொழியியல் பகுதியால் விளங்கும். 125 முதல் 159 முடியவுள்ள நூற்பாக்கள் அவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/449&oldid=1474724" இலிருந்து மீள்விக்கப்பட்டது