பக்கம்:இலக்கண வரலாறு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405

தனி மொழி தொடர் மொழி பொது மொழி எனச் சொல்லப்படும் மொழியின் வகையைத் தனிமொழி, இணைமொழி, துணைமொழி, பொதுமொழி, தணமொழி, கணமொழி, கலப்புறு மொழி என ஏழாக்குதல் பின்னவர் கொள்கை வழியதாம் (123).

“இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும்” என வரும் உடம்படுமெய் பற்றிய நூற்பாவை அப்படியே மேற் கொள்ளும் இவர்,

“கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்”

எனக் குறிக்கிறார். முன்விதிப்படி ‘கோவில்’ என வருதலும் இவ்விதிப்படி ‘கோயில்’ என வருதலும் ஏற்றுக் கொண்டார். இவர் இவ்வாறு இருவழக்கும் கொள்வதற்கு வழி செய்தார் எனினும், ‘கோயில்’ என்பதே செவ்விய ஆட்சியாம். நூலொடு படாத ‘கோவில்’ என்பதை நன்னூலார் கொண்டமை போலவே இந்நூலாரும் கொண்டார் என்னும் குறையே உண்டாகின்றது. இந்நாளில் உரைநடை பாடல்களில் கருதாமல் எழுதுவார். நடையிலும் பொதுமக்கள் பேச்சு வழக்கிலும் இருப்பதுமே ‘கோயில்’. பண்டையோர் நூலிலோ, உரையிலோ இல்லை. கடந்த நூற்றாண்டு வரை எழுந்த சிற்றிலக்கியங்சுளிலும் கூட இவ்வாட்சியில்லை. (எ.டு).

“வாயில் வந்து கோயில் காட்ட”-சிலம்பு.
“கோயில் நான்மணி மாலை”-நூற்பெயர்.
“கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டா” — நூலும், உரையும்.

சொல்லதிகாரம்

தொல்காப்பியத்தில் இடையியல், உரியியல் என ஈரியல்கள் உள. அவ்வாறே அளவில் சுருங்கியேனும் நன்னூலிலும் அவ்வியல்கள் உள. இவர் மும்மூன்றியல் பகுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/450&oldid=1474725" இலிருந்து மீள்விக்கப்பட்டது