பக்கம்:இலக்கண வரலாறு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406

என்னும் ஒருமுறையைக் கொண்டமையால் போலும் இடை உரியியல் செய்திகளை ஒழிபியல் படுத்திவிட்டார். ‘சில வரம்புகள் சில குறைகளை’ உண்டாக்கும் என்னும் முறைக்கு ஏற்ப இவ்வியைபு அமைந்து விட்டதெனலாம்.

உரிச்சொல், தொல்காப்பியத்தில் 98 நூற்பாக்களைக் கொண்டுளது. அவற்றுள் ஒரு சிலவற்றை வாங்கி வைக்கும் அளவில் இவர் அமைகிறார். 22 நூற்பா அவ்வகையில் உள்ளன. முத்து வீரிய ஒழிபியல் உரி நன்னூல் உரியியல் செய்தியில் விரிந்ததே. புதுவதொன்றும் இல்லையாம். இடைச்சொல் பற்றிய செய்தி மிகச் சுருங்கிற்று.

பொருளதிகாரம்

சிறுபொழுது ஆறு என்பதும் ஐந்து என்பதும் இருவகை நெறிகள். இவர் பின்னதை மேற்கொள்கிறார். நம்பியார் வழி அது. அப்பொழுதில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துரைப்பது இவர்தம் புது நெறி. கார்காலம் முதலிய பருவ நிகழ்ச்சிகளையும் எடுத்துரைக்கிறார். சான்றாகக் காரும் மாலையும்;

“வாடை யடித்தல் மயில்கே கயப்புள்
இந்திர கோபம் எழுந்தக மகிழ்தல்
அன்னம் கிளிமயில் அகன்று வருதல்
காந்தள் கொன்றை காயா மலர்தல்
கமலம் ஏங்கல் கார்காலக் குரித்தே”

“குவளை மலர்தல் குருகினம் ஒலித்தல்
கன்றை யுள்ளிக் கறவை போதரல்
வனசங் கூம்பல் மாலைக் குரித்தே”

அகத்திணைப் பொருள் போலவே, புறத்திணைப் பொருள் காலந்தோறும் இலக்கணரால் போற்றப்படவில்லை என அறியப்படுகின்றது. சங்கச் சான்றோர் போர்க்களம் சென்று அறம் உரைத்தும், அமைதிகாத்தும், தூதுரைத்தும், துணிவுபடுத்தும் பணியாற்றினர். சிறைக்களம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/451&oldid=1474727" இலிருந்து மீள்விக்கப்பட்டது