பக்கம்:இலக்கண வரலாறு.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

38. சுவாமி நாதம்



ஆசிரியர்

ஐந்திலக்கணமும் உரைக்கும் நூல்களுள் ஒன்று சுவாமிநாதம். இதன் ஆசிரியர் சுவாமி கவிராயர் என்பார். இவர் ஊர் கல்லிடையூர் எனப்படுகின்றது. அது நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த கல்லிடைக்குறிச்சி என்பதாகும்.

திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் திருக்குறிப்பின்படி இந்நூல் இயற்றப்பட்ட செய்தி பாயிரத்தால் புலப்படுகின்றது. சுப்பிரமணிய தேசிகர் என்பவர் மேலகரம் என்னும் ஊரினர். அவர் இளமையில் கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்தவர். சுவாமி கவிராயரின் இரு மொழிப் புலமையையும் இலக்கண வன்மையையும் அறிந்து அவர் தூண்டுதலால் இவர் இந்நூல் இயற்றினார்.

வரலாறு

இவர் மகனார் சிவசுப்பிரமணியன் என்பார். அவர் நாமதீப நிகண்டு, தொகை நிகண்டு என்பவற்றை இயற்றியவர், சுவாமி கவிராயரும் ஒரு நிகண்டு இயற்றினார். அதன் பெயர் பொதிகை நிகண்டு. சுப்பிரமணிய தேசிகர் காலமே சுவாமி கவிராயர் காலம் ஆகின்றமையால் அது பத்தொன்பதாம் நூற்றாண்டாகும். சமயம் சைவம் என்பது வெளிப்படை. ஒலிக்கு மூலம் ‘அணுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/456&oldid=1466723" இலிருந்து மீள்விக்கப்பட்டது