பக்கம்:இலக்கண வரலாறு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

412

திரள்' எனல் சமணக் கொள்கை என்பர். நாதகாரியமாம் விந்தொலி என்பது சைவக் கொள்கை என்பர். இதற்கு ஏற்ப இவர் “மூல முகிழ் நாதகாரியமாம் விந்தொலி ஓர்த்து எழுதின் எழுத்து” என்று கூறுதலால் சைவ சமயம் என்பது மேலும் விளக்கமாம்.

நூல்

நூலின் ஐந்திலக்கணங்களும் எழுத்ததிகாரம் சொல்ல்திகாரமென முறையே பெயர் பெற்றுள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் மும்மூன்று உட்பிரிவுகளை உடையனவாய் அமைகின்றன. உட்பிரிவுக்கு ‘மரபு’ என்பது பெயர். அவை:

எழுத்ததிகாரம்: எழுத்தாக்க மரபு, பதமரபு, புணர்ச்சி மரபு.

சொல்லதிகாரம்: பெயர்மரபு, வினைமரபு, எச்ச மரபு.

பொருளதிகாரம்: அகத்திணை மரபு, கைகோண் மரபு, புறத்திணை மரபு.

யாப்பதிகாரம்: உறுப்பு மரபு, பாவின மரபு, பிரபந்த மரபு.

அணியதிகாரம்: பொருளணி மரபு, சொல்லணி மரபு, அமைதி மரபு என்பன.

பிள்ளையார் வணக்க வெண்பா ஒன்று முதலில் உள்ளது. சிறப்புப் பாயிரம் பொதுப் பாயிரம் ஆகியவை 11 எண்சீர் விருத்தங்களைக் கொண்டுள்ளது. இப்பாயிரமும் சேர்த்து 201 எண்சீர் விருத்தங்கள் நூலில் இடம் பெற்றுள்ளன. அமைதி மரபு ஒரே ஒரு பா. அதன் இறுதியில் அமைதி மரபு முற்றும் என்றுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/457&oldid=1474735" இலிருந்து மீள்விக்கப்பட்டது