பக்கம்:இலக்கண வரலாறு.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39. சந்திரா லோகம்


சத்திரா லோகம் என்பது வடமொழியில் அமைந்த அணியிலக்கண நூல்களுள் ஒன்று. அவ்வடமொழி நூல் காளிதாசரால் இயற்றப்பட்டதென்றும் சயதேவன் (கி.பி. 1200-1300) என்பாரால் இயற்றப்பட்டதென்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.

ஆசிரியரும் நூலும்

சந்திரா லோகத்தை உரை நடையாகத் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் மொழி பெயர்த்து, ‘அணியிலக்கணம்’ எனப் பெயரிட்டு வழங்கினார். எடுத்துக்காட்டுகளைப் பாடலாக ஆக்கினார். இவ்இலக்கணத்தை நூற்பா வடிவில் ஆக்கியவர் முத்துசாமி ஐயங்கார் என்பார். இவர் இராமநாதபுரம் பெரும் புலவர் மு.இராகவ ஐயங்காரின் தந்தையார் ஆவர். இந்நூலின் மூலம் 1909 இல் மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்ப் பிரசுரம் இருபத்தெட்டாவதாய் வெளிவந்தது. இவ்விருவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டினர்.

வரலாறு

முத்துசாமி ஐயங்கார் நூற்றுக் கவனகர் (சதாவதானி) என்பதும் இராமநாதபுர அரசவைப் புலவர் என்பதும் மு. இராகவ ஐயங்கார்க்கும் அவர்தம் அம்மான் மகனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/459&oldid=1474738" இலிருந்து மீள்விக்கப்பட்டது