பக்கம்:இலக்கண வரலாறு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416

லோகத் தமிழ் நூலில் இடம் பெறவில்லை. வடமொழிச் சந்திரா லோகத்தில் இவ்வணிகளைக் குறிப்பிடாமை காரணமாக இருக்கலாம் என்பார் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியனார் (முந்நூல்களின் அறிமுகம் பக். 52).

பதிப்பு

வெளிப்பாடு இலாத நூல்களை வெளிப்படுத்திப் பரப்பும் ஆர்வத்தால் 1979இல் ஐதராபாத்தில் நிகழ்ந்த அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் முனைவர் ச.வே. சுப்பிரமணியம் அவர்களால் வெளியிடப்பட்ட நூற்றொகுதியில் அடங்கியது சந்திராலோகம். இவ்வகையில் இதனை இரண்டாம் பதிப்பு என்க. நூலில், தமிழில் அணி இலக்கணம் (1-35) முந்நூல்களின் அறிமுகம் (36-62) என்பவை விரிந்த அளவில் இடம் பெற்றுள. குவலயானந்தம் 1, சந்திராலோகம், குவலயா நந்தம்-2 என்னும் மூன்று நூல்களின் மூலங்களும் இடம் பெற்றுள்ளன. தமிழ் வடமொழி அணிகள், அணி இலக்கணங்கள் கூறும் அணிகள் முதலிய பின்னிணைப்புகளும் கொண்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/461&oldid=1466823" இலிருந்து மீள்விக்கப்பட்டது