பக்கம்:இலக்கண வரலாறு.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40. மாணிக்கவாசகர் குவலயானந்தம்


வரலாறு

குவலயானந்தம் என்னும் பெயர் விளங்கும் அணியியல் நூல்கள் இரண்டனுள் ஈதொன்று. இதனை இயற்றியவர், ‘மாணிக்க வாசகன் எனும் ஞானதேசிகச் சிவயோகி’ என்றும் ‘வாதவூரன்’ என்றும் சிறப்புப் பாயிரப் பாடல்களால் சொல்லப்படுகிறார். இப் பெயர்களும், ‘சிவன் உபதேசம் மனதினில் உணர்ந்தவர்’ என்பதும், ‘கூடல் வாழும் கொற்றவன் மீனத்துவசக் குரிசில் நண்பாய்த் தண்டமிழால் விளக்கும் என வாதவூரன் சாற்றினன்’ என்பதும் நமக்கு மாணிக்கவாசகராம் வாதவூரரையே நினைவூட்டுகின்றன. இவர் வாதவூரராகவும் இருக்கலாம்; மாணிக்கவாசகர் என்னும் பெயரினராகவும் இருக்கலாம்; அவ்வூரும் பெயரும் கொண்டு அவர் தகவெல்லாம் இவர்க்குரைத்ததாகவே கொள்ள வேண்டியுள்ளது. இவர் சமயம் சைவம் என்பது கடவுள் வாழ்த்துகள், இயல் தோறும் வரும் வணக்கப் பாடல்கள் ஆகியவற்றால் தெளிவாக விளங்குகிறது.

‘வரகுண பாண்டியன் என்பான் வேண்டிக் கொண்ட படி, வடமொழி அலங்கார நூலாகிய மீமாங்கிசையின் பொருள் உணர்ந்து அகத்தியமுனிவர் இயற்றிய சிவவியாகரணம் என்னும் நூலை முதல் நூலாகக் கொண்டு மாணிக்கவாசக சுவாமிகளால் குவலயானந்தம் என்ற பெயருடன் இலக்கணத்திற்கு இலக்கியமும் உரையுடன்இ.வ.-27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/462&oldid=1474742" இலிருந்து மீள்விக்கப்பட்டது