பக்கம்:இலக்கண வரலாறு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

419


“அவர்கள் இவர்களென் றாவது திரள்மொழி” (உறுப். 73-75)

என மூவகை மொழிகளைக் குறிக்கிறார். இவை சொல்லீறுகளைக் கொண்ட வகை என்க.

"“பெயர்ச்சொல் பலவும் காரணச் சொல்லே” (உறுப். 105).

என்கிறார்.

“ஒப்பனை கொள்வது உபமேயப் பொருள்

ஒப்பனை ஆவது உபமானப் பொருள்” (உறுப். 109).

என்பதும்,

“இலக்கணம் கருத்து இலக்கியம் அதில்நெறி" (உறுப். 111).

என்பதும் புதுவகை அமைதிய.

“நீர்தேயு வாயு மூன்றும் உயிர்ப்பொருள்
நிலம்விண் இரண்டும் உயிரிலாப் பொருளே”

(உறுப். 123)

என்பது வியப்பாக உள்ளது. ஆனால் இவர்,

“ஊருதல் நீர்; தேயு நடப்புதல்; வாயு
பறப்புதல் என்றும் பகர்ந்தனர் புலவர்”

(உறுப். 124)

என்கிறார். உயிர்ப்பொருள் இனமே என்றது எண்ணத் தக்கது. இதனைப்போல் இவர் தரும் இயற்கை, செயற்கை விளக்கமும் புதுமையே (உறுப். 125-127). ‘சடம்’ குடமாயதாகக் குறிக்கிறார்:

“கடமெனும் ஒலிசொல் கடம் எனும் ஒலியைக்
குடமென அறிவது சொற்பய னாகும்”

என்பது அது (உறுப், 132).

அணிகளின் பெயர் பெரும்பாலும் வடமொழிப் பெயராலேயே குறிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/464&oldid=1474745" இலிருந்து மீள்விக்கப்பட்டது