பக்கம்:இலக்கண வரலாறு.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

‘ காவியப் பொருள் ஒழி அணி’ என்பதை,

“மலையது பறக்கின் மாருதம் அதனின்
மரங்கள் இருக்க வழக்கிலை என்பது
காவியப் பொருளொழி யாகக் கருதுவர்”

என்கிறார் (அணி. 86). காவியங்களில் கூறப்படும் செய்திகளைக் காரணம் கூறி விலக்குவதாகலாம். ‘அற்ப மகிட்சி’ என்றோர் அணிப்பெயர் கூறுகிறார். வீரசோழிய வழி இது. குன்றக்கூறல் முதலாக ஈரைங் குற்றம் இவையெனக் கூறும் இவர் தனித்தனி நூற்பாக்களால் அவற்றை விளக்குகிறார் (சித். 18-28).

அறிஞோர் (சித். 19, 29), தின்மை (உறுப், 20) என அரிய ஆட்சிகள் சிலவற்றைக் கொண்டுளார்.

பதிப்பு

“திருமயிலை அம்மை ஆண்டியப்பன் கிராமணி குமாரர் அண்ணாசாமி உபாத்தியாயர்”' இதனைப் படி எடுத்தவர் என்பதும், கைப்படியை ஏட்டுப்படியுடன் ஒப்பிட்டவர், சாமிநாதையர் நூலகத் துணைப் பாதுகாவலர் மு. கோ. இராமன் என்பதும் ஆய்வுரையுடன் முதற்கண் அச்சிட்டவர் அறிஞர் ச. வே. சுப்பிரமணியனார் என்பதும் அறியத்தக்கன. வெளிவந்த ஆண்டு 1979.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/465&oldid=1474746" இலிருந்து மீள்விக்கப்பட்டது